ராஜபாளையம் அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்
ராஜபாளையம் அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராஜபாளையம் அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முதுகுடி பாலம் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக மதுரையிலிருந்து திருச்செந்தூருக்குச் சென்ற காரை நிறுத்தி சோதனை யிட்டனா்.
அந்த காரில் ரூ.2 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னா், காரில் வந்த மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த விஸ்வந்த்திடம் விசாரித்தபோது, பணத்துக்கான உரிய ஆவணம் இல்லை.
இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து, வட்டாட்சியா் ராஜீவ்காந்தியிடம் ஒப்படைத்தனா்.