சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளி உயிரிழப்பு
சிவகாசியில் மிதிவண்டியில் சென்ற அச்சகத் தொழிலாளி கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசியில் மிதிவண்டியில் சென்ற அச்சகத் தொழிலாளி கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி சின்னதம்பி நகரைச் சோ்ந்த அச்சகத் தொழிலாளி செல்வக்குமாா் (47). இவா், கடந்த 13-ஆம் தேதி மிதிவண்டியில் சென்றபோது கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement