கோப்புப் படம் 
இணையம் ஸ்பெஷல்

இ-சிகரெட் பாதுகாப்பானது இல்லையா? புகைபிடிப்பதை நிறுத்த உதவாதா?

இ-சிகரெட் பாதுகாப்பானது இல்லை என்றும், புகைபிடிப்பதை நிறுத்த உதவாது என்றும் மருத்துவ நிபுணர் தகவல்.

இணையதளச் செய்திப் பிரிவு

சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதற்கான ஒரு உபாயமாக, இ-சிகரெட் தோல்வியே அடைந்திருப்பதாக மருத்துவர் நீது ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள பிஎஸ்ஆர்ஐ மருத்துவமனையின் நுரையீரல் அவசர சிகிச்சை மற்றும் உறக்கவியல் துறை நிபுணரான நீது ஜெயின், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு அளித்த நேர்காணலில், தொடர்ந்து பல காலமாக இ-சிகரெட் பிடிப்பது ரத்த நாளங்களை சேதமடையச் செய்யும். அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்.

அவரிடம் நடத்திய நேர்காணலில்..

புகையிலைக்கு மாற்றாக, உடலுக்குப் பாதுகாப்பானது இ-சிகரெட் என மக்கள் கருதுகிறார்களே அது உண்மையா?

புகையிலை மற்றும் சிகரெட்டுகளுக்கு மாற்றாக இ-சிகரெட் இருக்கும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த கூற்று நீண்டகாலம் நீடிக்கவில்லை. இந்த புதிய சிகரெட்டில் இருக்கும் வேறு பொருள்கள் உண்மையிலேயே உடலுக்கு அதிகத் தீங்கினை ஏற்படுத்துகிறது. வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இ-சிகரெட்டில் வேறு பல பொருள்கள் கலந்திருப்பதாகவும், பாலிதீன், க்ளைகோல், கிளிசரின் மற்றும் அக்ரோலைன், ஃபார்மாடிஹைட் உள்ளிட்ட வாசனை தரும் பொருள்களும் அடங்கியிருப்பதாகவும் இதனைப் புகைக்கும்போது நுரையீரல் மட்டுமல்லாமல் இதய பாதிப்பும் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில், அக்ரோலைன் என்ற பொருள் கலந்திருப்பதாகவும், இது வழக்கமாக தேனீக்களைக் கொல்லப் பயன்படுத்தப்படுவதாகவும் இது நுரையீரலை கடுமையாக பாதிக்கும். எனவே, இந்த இ-சிகரெட்டில் இருக்கும் அல்ட்ரா-ஃபைன் பொருள்கள் எல்லாம் சேர்ந்து ஏற்படுத்தும் புகையானது, காரிலிருந்து வெளியேறும் புகைக்கு இணையானது. நினைத்துப் பாருங்கள், காரிலிருந்து வெளியேறும் புகையை நாம் சுவாசிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை, அது உடலுக்கு ஏற்படுத்தும் தீங்கினை. அது மட்டுமல்லாமல் இ-சிகரெட்டில் நிக்கல், தின், ஈயம் உள்ளிட்ட உலோகங்களும் கலந்திருக்கின்றன. இது உடலுக்கும் நுரையீரலுக்கும் மிகவும் தீங்கிணைக்கும் என்று கூறுகிறார்.

இ-சிகரெட் புகையை சுவாசிக்கும்போது ஏற்படும் பொதுவான உடல்நலச் சிக்கல்கள்?

இ-சிகரெட் புகையை சுவாசிப்பதால், இதய துடிப்பு அதிகரிக்கும், அதனால் ரத்த அழுத்தம் அதிகமாகும். நிகோடின் காரணமாக, இதயத் துடிப்பில் மாற்றம் நேரிடுகிறது. நிகோடின் காரணமாக இதயத் துடிப்பில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு அது இதய நோய்க்கு வழிவகுக்கும். மேலும் அதிலிருக்கும் ஆல்டிஹைட், இதய நோய் இருப்பவர்களுக்கு நிலைமையை மேலும் மோசமாக்கும். நீண்டகாலம் ஒருவர் இ-சிகரெட் பிடித்தால் ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பானது மெல்ல நெஞ்செரிச்சல், இதய செயலிழப்பு என இட்டுச்செல்கிறது.

புகைப்பதை விடுவதற்கு இ-சிகரெட் உதுவுமா?

புகைபிடிப்பதை நிறுத்தும் எண்ணத்தோடு இ-சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கு அது பலனளிக்கவில்லை என்பது தெளிவாகிவிட்டது. அது மட்டுமல்ல, புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று நினைத்து, இ-சிகரெட் பிடிக்கத் தொடங்கியவர்கள் பலரும் தற்போது இ-சிகரெட் மற்றும் சிகரெட் என இரண்டையும் விட முடியாமல், இரண்டையும் பிடித்துக் கொண்டிருப்பதையும் காண நேர்கிறது. முதலில் புகைப்பதிலிருந்து வெளியேற நினைத்து, இரண்டு தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படுகிறது என்கிறார் மருத்துவர் நீது ஜெயின்.

இதுவரை புகைப்பழக்கமே இல்லாமல், இ-சிகரெட் பிடிப்பவர்களுக்கு சொல்லும் அறிவுரை?

இ-சிகரெட் பழக்கம் வேண்டவே வேண்டாம். அதற்கு அடிமையாகிவிட வேண்டாம். இதனால், நுரையீரலில் பாதிப்புகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மிக மோசமான நுரையீரல் பாதிப்புகள் ஏற்படவும் வழி வகுக்கிறது. சிகரெட் பிடிப்பவர்கள் அதனை கைவிட முயற்சிக்க வேண்டும். இ-சிகரெட் பிடிக்க நினைப்பவர்கள் அந்த சிந்தனையையே கைவிட வேண்டும் என்கிறார் மருத்துவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT