பிறவியிலேயே உட் செவி இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் பேச இயலாமலும் காது கேட்கும் திறனின்றியும் இருக்கின்றனர். 4 வயதுக்கு முன்பே குழந்தையின் மூளைப் பகுதியில் சில எலக்ட்ரோடுகளைப் பொருத்தி பின் மண்டையில் ஒரு காதுக்கு அருகில் கருவியைப் பொருத்தும் இர்ஸ்ரீட்ப்ங்ஹழ் ஐம்ல்ப்ஹய்ற் என்ற அறுவை சிகிச்சை மூலம் உசப நிபுணர்கள் காது கேட்கவும் பேச வைக்கவும் முடியும் என்று சொல்கிறார்கள். இம்மாதிரி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை முறையில் சிகிச்சை செய்து குணப்படுத்த முடியுமா?
எஸ்.அனந்தராமன், சென்னை - 40.
பிணி பல வகைப்படும் என அஷ்டாங்க சாங்கிரகம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது. அவை பிறவியிலேயே ஏற்படுவது, கருவில் ஏற்படுவது, பிறந்தபின் ஏற்படுவது, காயம் போன்றவற்றால் ஏற்படுவது, பருவகாலங்களால் தோன்றுவது, பசி, தாகம் போன்ற இயற்கைக் குணங்களால் ஏற்படுவது என்ற வகையில் அமைகின்றன.
ஆணின் விந்துவும் பெண்ணின் கருமுட்டையும் ஆரோக்கியமான நிலையில் இல்லாமல் அவற்றிலுள்ள குறைபாடுகளால் ஏற்படக்கூடிய நோய்கள் குஷ்டம், மூலநோய், நீரிழிவு போன்றவையாகும். தாய் கருவுற்றிருக்கும்போது உண்ணும் தவறான உணவினாலும் நடவடிக்கையினாலும் உடல் ஊனமுறுதல், நிறமாற்றம், வெண்குஷ்டம் போன்ற பிணிகள் தோன்றுகின்றன. உணவினால் ஏற்படும் அன்னரசக் கோளாறும், கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படும் தாயின் மனக்குறையும் இதற்குக் காரணமாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த உபாதை மேற்குறிப்பிட்ட இரண்டு வகைகளாலும் ஏற்படக் கூடியவை. இந்த உபாதையை குழந்தை தன் தவறால் சம்பாதித்துக் கொள்ளவில்லை. அப்பாவும், அம்மாவும் சேர்ந்தோ அல்லது தனித்தோ செய்த தவறால் விளைந்தது. அதற்கு அந்தக் குழந்தை பெறும் தண்டனைதான், காதின் அருகில் பேட்டரி வைத்துக் கொண்டு நடப்பது.
தலைப்பகுதியில் பிராணவாயு எனும் வாததோஷம் தன் பலத்தால் ஆட்சி செய்கிறது. "க்ராஸ க்ராஸôந்தயோ: ப்ராணே ப்ரதுஷ்டே மாதரஷ்விணி' எனும் ஆயுர்வேதம், அதாவது கேட்கும் திறனையும், பேசும் திறனையும் ஏற்படுத்தித் தரும் பிராண வாயுவானது, தன் சீற்றத்தினால் அவற்றின் செயல்திறனைக் குறைத்துவிடுவதோ அல்லது இல்லாமலேயே செய்துவிட்டாலோ, ஒவ்வொரு சாத உருளைக்கும் நடுவே ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து, செயல்திறனை இழந்துள்ள புலன்களைச் செயல்படுத்த வேண்டும் என்று அதற்கு அர்த்தமாகும். முதல் ஆறுமாதங்களுக்கு குழந்தை தாய்ப்பாலை மட்டுமே முக்கிய உணவாகக் கொண்டிருப்பதால், மருந்துகளைத் தாய் இதுபோலச் சாப்பிட வேண்டும். குழந்தை சாப்பாடு சாப்பிட ஆரம்பித்ததும், சிறிது சிறிதாக முன் குறிப்பிட்டவிதம் கொடுத்து வர வேண்டும்.
ஆயுர்வேத மருந்துகளில் சாரஸ்வத சூர்ணம் எனும் மருந்தை, குழந்தை பிறந்து ஆறுமாத காலம் ஆன பிறகு ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை எடுத்து, சாரஸ்வத கிருதம் எனும் நெய் மருந்தை 2 - 4 துளிகள் சேர்த்து, 1 - 2 துளிகள் தேனும் குழைத்து காலை, இரவு உணவின் ஒவ்வொரு கவளத்திற்கும் நடுவே, குழந்தையின் நாக்கின் நடுவே தடவிவிட, பிராண வாயுவினால் ஏற்படும் கோளாறுகள் விலகி, குழந்தைக்குப் பேச்சுத்திறன் மேம்பட நல்ல வாய்ப்பிருக்கிறது. தலைக்கு பலா தைலத்தை இளஞ்சூடானவிதத்தில் தடவி, காதின் பின்புறம், கழுத்து ஆகிய பகுதிகளில் மென்மையாகத் தடவி, சிறிதுநேரம் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டி, பூத்துண்டால் குழந்தையின் உடலைச் சுற்றி, வெதுவெதுப்பான பால், வெந்நீர் போன்றவற்றைப் பருகச் செய்ய வேண்டும்.
உள் மருந்துகளில் ரஜன்யாதி சூர்ணம் 1 - 2 சிட்டிகை பிரம்மீ கிருதம் எனும் நெய் மருந்தை 1 - 2 துளிகளை 3 - 4 துளிகள் தேன் குழைத்து குழந்தைக்கு ஆறுமாதம் முடியும் தருவாயிலிருந்தே தொடர்ந்து கொடுத்து வந்தால் புலன்கள் வலுப்படும். குழந்தை நல்ல புத்திசாலித்தனமாகவும், ஆரோக்கியமாகவும், புஷ்டியாகவும் வளரும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.