முகப்பு
தினமணி கதிர்

சிறுகதை: வந்து சென்ற நிழல்!

அன்னனூர் இரயில் நிலையத்தில் வந்து நின்ற மின் சார ரயில் வண் டியி லி ருந்து கூட்ட நெரிசலி லி ருந்து பிதுங் கிக் கொண்டு வெளியே வந்து விழுந் தாள் அல மே லம் மாள். அவ ளுக்கு ரொம்ப பட ப டப் பாக இருந் தது. மத

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:33 PM
பகிர்:

அன்னனூர் இரயில் நிலையத்தில் வந்து நின்ற மின் சார ரயில் வண் டியி லி ருந்து கூட்ட நெரிசலி லி ருந்து பிதுங் கிக் கொண்டு வெளியே வந்து விழுந் தாள் அல மே லம் மாள். அவ ளுக்கு ரொம்ப பட ப டப் பாக இருந் தது. மத் தி யான வேளை யி லும் என்ன கூட் டம் என்று அலுத் துக் கொண் டாள். எத் தனை முறை ரயி லில் பய ணித் தா லும் இறங் கும் நேரத் தில் எந் தப் பக் கம் பிளாட் பா ரம் வரு மென்று குழம்பி விடு கி றது. இன் றைக் குத் தூக் கக் கலக் கம் வேறு.

வெயி லின் உக் கி ரத் தி லும், நக ரும் இர யில் வண் டி யின் ஜன்ன லி னூடே முகத் தில் வந்து மோதும் இத மான காற் றின் குளிர்ச் சி யில் இலே சாய் கண் அயர்ந் த வள் அப் ப டியே தூங் கிப் போனாள். நல்ல வேளை யாக ஏதோ ஒரு நிலை யத்தை இர யில் கடந்து கொண் டி ருக் கும் போது திடுக் கிட்டு விழித் த வள், பக் கத் தில் உட் கார்ந் தி ருந்த இளம் பெண் ணி டம், "" எந்த ஸ்டே ஷன்ம்மா போச்சு? '' என்று கேட் டாள்.

அவள் , ""தெரி யல பாட்டி'' என்று அசி ரத் தை யாய் பதில் சொல் லி விட்டு தான் வாசித் துக் கொண் டி ருந்த புத் த கத் தில் மூழ் கிப் போனாள். கடைசி நிலை யத் தில் இறங்க வேண் டி ய வர் க ளுக்கு இடைப் பட்ட நிலை யங் கள் பற் றிய பிரக்ஞை தேவை யில்லை போலும். இன் னொ ரு வர் தான் வலிந்து அவ ரா கவே பதில் சொன் னார். "" திரு முல் லை வா யில் போயி ருச்சு. அடுத்து அன் ன னூர் வரப் போகுது பெரி யம்மா'' கேட் ட தும் அடித் துப் பிடித் துக் கொண்டு எழும்பி கால் க ளுக் கி டை யில் வைத் தி ருந்த சட் டைப் பையைத் தூக் கிக் கொண்டு அவ ச ர மாய் இறங் கும் வழியை நோக்கி நக ரத் தொடங் கி னாள் அவள்.

கோடை வெயில் தீவி ர மாக உறைத் தது. ஒரு சோடா வா வது குடித் தால் தேவ லாம் போலி ருந் தது. சேலை முந் தா னை யில் ஒரு முனையி லி ருந்த முடிச்சை அவிழ்த் துப் பார்த் தாள். ஒரே ஒரு

எட் ட ணா எட் டிப் பார்த் தது. இந் தப் பணத் திற்கு பாக் கெட் தண் ணீர் கூடக் கிடைக் காது. இப் போ தைக்கு அது கிடைத் தால் கூடப் பர வா யில்லை என் று தான் தோன் றி யது அவ ளுக்கு.

வீட் டிற் குப் போவ தற்கு அவள் இன் னும் குறைந் தது 3 1/2 கி.மீ. தூர மா வது நடக்க வேண் டி யி ருக் கும். இவ் வ ளவு தூரத்தை ஒரு நா ளும் அவள் நடந்து கடக்க நேர்ந் த தில்லை. வாழ்க்கை சுழற்றி அடித்த வேகத் தில் எல் லா வற் றை யும் பழ கிக் கொள்ள வேண் டி ய தா கி விட் டது. மிக வும் சோர் வா க வும் களைப் பா க வும் உணர்ந் தாள்.

தண் ணீ ரைக் காசு கொடுத்து வாங் கிக் குடிக் கிற கால மும் வந் ததே என்று முன கிக் கொண் டாள். தொண்டை வறட் சி யாக இருந் தது. தண் ணீர் குடிக் கா மல் தொடர்ந்து நடக்க முடி யாது என்று தோன் றி யது. கடைக் கா ர னி டம் எட் ட ணா வைக் கொடுத்து, "" ஒரு தண் ணிப் பாக் கெட் கொடேன்'' என் றாள்.

""இன் னும் ஐம் பது பைசா வேணும். தண் ணிப் பாக் கெட் ஒரு ரூபாய்'' என் றான் இயந் தி ரத் த ன மாக. ""தெரி யு மப்பா, வேற சில் லறை இல்ல என் கிட்ட, தாகமா இருக்கு'' என் றாள் மிக வும் இரங் கத் தக்க குர லில். இதைச் சொல்லி முடிப் ப தற் குள் மன சுக் குள் கூசிப் போனாள் அவள்.

கடைக் கா ரன் என்ன நினைத் தானோ, அலர் மே லம் மா ளி ட மி ருந்து காசை மறுத் து விட்டு தன் னு டைய உப யோ கத் திற் காக வைத் தி ருந்த தண் ணீர்ப் பாட் டிலை எடுத்து அவ ளி டம் நீட் டி னான். கண் கள் பனிக்க பாட் டிலை வாங் கி ய வள் ஆசை தீரக் குடித்து மிச் சத் தண் ணீரை நன் றி யு டன் அவ னி டம் திருப் பித் தந் து விட்டு நிலை யத்தை விட்டு மெது வாக வெளி யே றி னாள்.

ஏதேதோ யோச னை க ளு டன் இர யில் தண் ட வா ளங் க ளைத் தடு மாற் றத் து டன் கடக் கப் போன வளை ஒரு சிறு மி யின் குரல் தடுத்து நிறுத் தி யது. "" பாட்டி அங் கேயே நில் லுங்க..எதுத் தாப் புல இர யில் வந் துக் கிட் டு ருக்கு..'' என்று கிட் டத் தட்ட அல றி னாள் அந் தச் சிறுமி. அல மே லம் மாள் அப் ப டியே ஸ்தம் பித்து நிற் ப தற் கும் இர யில் தட தட வென கடந்து போவ தற் கும் சரி யாக இருந் தது.

""படு பாவி ஸ்டே ஷ னுக் குப் பக் கத் துல வரும் போது கூட சத் தம் குடுக் காம ஓட் டிட் டுப் போறான் பாரு...''என்று சிறுமி என் ஜின் டிரை வ ரைத் திட் டி யது இர யில் கிழித் துப் போன காற் றில் அரை பட் டுக் கரைந்து போனது. சிறு மியை கனி வாய்ப் பார்த் த படி நடக் கத் தொடங் கி னாள் அல மே லம் மாள். கையி லி ருந்த பை பேயாய்க் கனத் தது. மக ளி ட மி ருந் தா வது ஒரு 50 ரூபாய் வாங் கிக் கொண்டு வந் தி ருக் க லாம். அவ ளும் ""வழிச் செல வுக் கெல் லாம் பணம் வச் சி ருக் கை யில் லம்மா'' என்று கேட் கத் தான் செய் தாள். "" அதெல் லாம் தம்பி தாரா ள மாக் கொடுத் துத் தான் அனுப் பி னான்டி'' என்று சமா ளித் துக் கிளம் பி விட் டாள்.

கேட் டி ருந் தால் அவ ளா லும் ஏதா வது தர முடிந் தி ருக் குமா என்று சந் தே க மா கத் தான் இருந் தது. அவள் கேட்ட தொனி யில் சுரத்தே இல்லை. புகுந்த வீட் டில் அவள் சந் தோ ஷ மாக இருப் ப தற் கான அறி கு றி களே தெரி ய வில்லை. எதை யும் அவள் வெளிப் ப டை யாய்ச் சொல் ல வில்லை என் றா லும் தானும் அவ ளின் தம் பி யும் மனக் கஷ் டப் ப டக் கூ டாது என் ப தற் காக அவ ளின் கஷ் டங் களை மறைக் கி றாளோ என்று அலர் மே லம் மா ளுக் குச் சந் தே க மாக இருந் தது.

மக ளு டன் மனம் விட் டுப் பேசு வ தற் கான தனி மை யும் வாய்க் கவே இல்லை. எப் போ தும் சம் பந்தி வீட் டைச் சேர்ந் த வர் கள் யாரா வது கூடவே இருந் தார் கள். அவ ச ரப் பட்டு பெண்ணை நர கத் தில் தள்ளி விட் டு விட் டோமோ என்று அல மே லம் மா ளுக்கு மனக் கி லே ச மாக இருந் தது.

அவ ளின் வீட் டுக் கா ரர் ரிட் ட யர்ட் ஆன போதே, கிடைத்த பணத்தை வைத்து வசந் திக்கு கல் யா ணம் செய்து அனுப் பி வி ட லாம் என் று தான் சொன் னாள். அல மே லம் மாள். அப் போது நல்ல வரன் க ளும் வந் சேர்த்து அதிக வட் டிக்கு ஆசைப் பட்டு பைனான்ஸ் கம் பெ னி க ளில் போய்க் கொட் டி னார் அவர்.

""வசந் திக்கு இரு பது வய சு தான ஆகுது இப்ப... இன் னம் மூணே வரு ஷத் துல போட்ட பணம் இரட் டிப் பா யி டும். அத வச்சு நம்ம பொண் ணுக்கு  இன் னும்

சிறப்பா கல் யாணம் செய்து அனுப் ப லாம்.'' என் றார். ஆனால் வெகு சீக் கி ரமே பைனான்ஸ் கம் பெ னி கள் மூழ் கிப் போக, முத லுக்கே மோச மாகி அந்த அதிர்ச் சி யி லேயே அவர் செத் துப் போனார்.

ஒரே நாளில் வாழ்க் கை யின் வீழ்ச்சி அவளை நிலை கு லை யச் செய் து விட் டது. கல் யாண வய தில் முதிர்ந்து நிற் கும் பெண், படித் துக் கொண் டி ருக் கும் பையன் என்று இரண்டு பிள் ளை க ளு டன் நிரா த ர வாய் தெரு வில் நின் ற போது ஆறு த லுக் குக் கூட யாரு மில்லை. எங் கா வது வேலைக் குப் போக லா மென் றால், அது வ ரைக் கும் வீட் டின் சமை ய லறை தவிர்த்து வேறு உல கம் அறிந் தி ருக் க வில்லை. அதி கம் படித் தி ருக் க வும் இல்லை. அக் கம் பக் கத்து வீடு க ளுக் குப் போய் பத் துப் பாத் தி ரம் தேய்த் துப் பிழைக் க லா மென் றால் அதற் கும் முன் னர் வாழ்ந்த வாழ்க்கை முட் டுக் கட்டை போட் டது, கெüர வம் என்ற பெய ரில்.

என்ன செய் வது என்று யோசித்து அவ சர அவ ச ர மாய் வீட்டை விற் று விட்டு, பக் கத் தி லேயே மிகச் சிறிய ஒரு வாடகை வீட் டிற்கு குடி போனார் கள். கொஞ்ச நாட் க ளுக்கு அப் பு றம் தன் னு டைய நகை க ளை யும் வீடு விற்று வந்த பணத் தின் பெரும் பகு தி யை யும் போட்டு மக ளுக் குக் கல் யா ணம் பண்ணி அனுப் பி னாள். மிச் சப் பணத்தை வங் கி யில் டெபா ஸிட் டா கப் போட்டு அதற் குக் கிடைக் கும் சொற்ப வட் டிக் குள் வாழ்க் கை யின் தேவை க ளைச் சுருக் கிக் கொண் டார் கள். பைய னும் ஒரு வழி யாய் இன் ஜி னி ய ரிங் முடித் து விட் டான். அவ னுக் கொரு வேலை கிடைத் து விட் டால் விடிந்து விடு மென்று தோன் றி யது அல மே லம் மா ளுக்கு.

இர யில் நிலைய வெளி க ளைத் தாண்டி மேடே றிய போது, திருப் பத் தில் எதிர்ப் பட்ட பெண் திடீ ரென்று, ""பெரி யம்மா நீங் களா? '' என்று முகம் பிர கா ச மா னாள். அல மே லம் மா ளுக் குச் சட் டென்று அவளை யாரென்று அடை யா ளம் தெரி ய வில்லை. கூர்ந்து பார்த்த போது புரி பட் டது.""சுந் த ரி யில்ல நீ, நீ எங் கேடி இந் தப் பக் கம். பெரிய மனு ஷி யாட் டம் ஆயிட் டே யடி...ஆமா...ஆயி டுச்சே அஞ்சு வரு ஷத் துக் கும் மேல...குடும் பத் தோட சொந்த கிரா மத் திற் குக் குடி போய் விட் டதா இல்ல கேள் விப் பட் டேன். அண் ணன், அப்பா எல் லாம் செüக் கி யம் தான...'' பிரமை வில கா மல் பேசிக் கொண்டு போனாள் அல மே லம் மாள்.

சுந் த ரி யின் முகத் தில் கருமை படர்ந்து. "" கிரா மத் து ல யும் எங் கள யாரும் நிம் ம தியா வாழ உடல பெரி யம்மா. இங்க வர்ற பேப் பர் அங் க யும் தான வரும். ஊருக் குப் போன கொஞ்ச நாளி லேயே நாங்க பெங் க ளூர் பக் கம் பிழைக் கப் போயிட் டோம். இப்ப முரு கப்பா பாலி டெக் னிக் குல சேர் ற துக்கு அப் ளி கே ஷன் வாங் கிட்டு, திரும்ப பெங் க ளூ ருக் குப் போயிட் டு ருக் கேன் பெரி யம்மா'' என் றாள் சுந் தரி.

தினப் பத் தி ரி கை யில் வந்த ஒரு செய்தி ஒரு குடும் பத் தையே குலைத் துப் போட்ட கொடூ ரம் அல மே லம் மா ளுக்கு ஞாப கம் வந் தது. அல மே லம் மா ளின் வீட் டுக்கு எதிர்த் தாற் போலி ருந்த காலி மனை யில் குடிசை போட் டுத் தங்கி இருந் தது சுந் த ரி யின் குடும் பம். மனைக் குச் சொந் தக் கா ரன் காலி ம னையை காபந்து பண் ணு வ தற் காக இவர் க ளைக் குடி வைத் தி ருந் தான்.

ஏழ் மை யான குடும் பம். ஆனால் செம் மை யான வாழ்க்கை. சுந் த ரி யின் அப்பா பெயின் டிங் வேலை கள் செய் வார். அவ ளின் அம் மா விற்கோ நிறைய திற மை கள். கை ரேகை பார்ப் பாள், குறி சொல் வாள். அவ் வப் போது அவள் மீது சாமி இறங்கி அருள் வாக் கும் சொல் வாள். அவள் சொல் வது அப் ப டியே பலித் தது என்று பல ரும் பேசிக் கொள் வதை அல மே லம் மாள் கேட் டி ருக் கி றாள். வீடு தங் கவே மாட் டாள். கோயில், திரு விழா என்று அலைந்து கொண் டி ருப் பாள். எப் போ தும் மஞ் சள் உடை நெற் றி யில் ஒரு ரூபாய் அள விற்குப் பெரி தாய் குங் கு மம். அதை யும் மீறி அப் படி ஓர் அழ கில் ஜொலிப் பாள்.

சுந் த ரி யும் அவ ளின் அண் ண னும் பள் ளிக் குப் போகும் நேரம் தவிர்த்து மற்ற நேர மெல் லாம் அல மே லம் மாள் வீட் டில் தான் பழி யாய்க் கிடப் பார் கள். ஏவிய வேலை க ளைச் செய் வார் கள். கொடுத் த தைச் சாப் பிட் டுக் கொள் வார் கள். சுந் த ரி யின் அப் பா வும் தென்னை மரத் தி லேறி தேங் காய் பறிப் பார். அவற்றை உரித்து, கடை க ளுக் குக் கொண்டு செய் வார்.

ஒரு நாள் காலை யில் குறி சொல் வ தற்கு வெளி யில் கிளம் பிப் போன சுந் த ரி யின் அம்மா இர வில் வீடு திரும் ப வில்லை. எங்கு போனாள் என் கிற தக வ லும் இல்லை. அன் றைக்கு நடு ராத் திரி சுந் த ரி யின் அப்பா அல மே லம் மா வின் வீட் டைத் தட்டி அவள் கணவரிடம், ""சுந் த ரி யோட அம்மா போலீஸ் ஸ்டே ஷன்ல இருக் கா ளாம்யா'' என்று அழு தார். இரு வ ரும் அவ ச ர மாய்க் கிளம் பிப் போய், அவளை அங் கி ருந்து மீட் டுக் கொண்டு வந் தார் கள்.

அடுத்த நாள் தினப் பத் தி ரி கை யில் வந்த செய்தி தெரு விற்கே அவ லா னது. சென் னை யில் ஒரு ஹோட்ட லில் போலீஸ் ரெய்டு என் றும் அதில் விப சார அழ கி கள் கைது என் றும் போட் டி ருந் தார் கள். அழ கி க ளின் புகைப் ப டங் கள் வண் ணத் தில் அச் சே றி யி ருந் தன. அதில் சுந் த ரி யின் அம்மா மஞ் சள் உடை யில் பெரிய குங் கு மத் து டன் தனித் துத் தெரிந் தாள்.

குறி கேட் ப தற் கா கத் தான் தன்னை ஒரு வன் அங்கு வரச் சொல்லி இருந் தான் என்று அவள் சொன் ன தைப் போலீஸ், பொது ஜ னம் யாருமே நம் ப வில்லை. அசிங்க அசிங் க மாய்ப் பேசி அவ மா னப் ப டுத் தி னார் கள். பெண் கள் கூடு கிற இடங் க ளில் எல் லாம் இதே பேச் சா கவே இருந் தது. இரண் டாம் நாள் சுந் த ரி யின் அம்மா தற் கொலை செய்து கொண் டாள். அதற் கப் பு றம் ஒரு வேளை சுந் த ரி யின் அம்மா உண் மை யைத் தான் சொல்லி இருப் பாளோ... அநி யா ய மாய் ஒரு உயிர் போய் விட் டதே என்று சிலர் "உச்' கொட் டி னார் கள். சுந் த ரி யின் குடும் பம் வீட் டைக் காலி பண் ணிக் கொண்டு எங்கு போகி றோம் என்று யாரி ட மும் சொல் லிக் கொள் ளா ம லேயே தெருவி லி ருந்து வெளி யே றி னார் கள்.

"" வீட் டுக்கு ஒரு வழி வந் துட் டுப் போயேன்டி''

என் றாள் அல மே லம் மாள்.

""மன் னிச் சுக் குங்க பெரி யம்மா, நம்ம தெருக் கா ரங்க யாரை யும் பார்க் கிற தைரி யம் எங் க ளுக்கு இன் னும் வரல... நீங்க ஏன் பெரி யம்மா நடந்து போயிட்டு இருக் கீங்க.. இருங்க நான் போயி ஒரு ஆட்டோ புடிச் சுட்டு வர் றேன்.''

இவ ளுக்கு தங் க ளு டைய தற் போ தைய குடும்ப நிலைமை தெரிந் தி ருக்க வாய்ப் பில்லை. தெரி ய வும் கூடாது என்று விரும் பி னாள் அல மே லம் மாள்.

""இல் லடி.. டாக் டர் முடிஞ் சப் பல் லாம் நடக் கச் சொல் லி யி ருக் கி றார் அதான்'' சமா ளிக்க முனைந் தாள். ""அடப் போங்க பெரி யம்மா...அதுக் காக இந்த வேனாத வெயில் லயா நடப் பாங்க....'' என் ற படி இவள் எவ் வ ளவோ மறுத் தும் கேட் கா மல் ஓடிப் போய் ஒரு ஆட் டோ வைப் பிடித் துக் கொண்டு ஏற்றி அனுப் பி விட் டுத் தான் அவள் விடை பெற் றுப் போனாள்.

ஆட் டோ வில் பய ணிக் கும் போது முள் ளின் மீது உட் கார்ந் தி ருப் ப தாய் உணர்ந் தாள் அல மே லம் மாள். சிறு பெண் அன் பி னா லும், ஆர் வக் கோளா றி னா லும் ஆட்டோ அமர்த் திக் கொடுத் து விட்டு அவள் பாட் டுக்கு தன் வழி யில் போய் விட் டாள். வீட் டில் போய் இறங் கி ய தும் ஆட்டோ சத் தம் கொடுக்க வேண் டுமே! எப் ப டிக் கொடுப் பது? பேசா மல் தன் னி டம் பண மில்லை என் கிற உண் மையை சுகந் தி யி டம் சொல்லி இருக் க லாமோ? சுய கெü ர வத் தைக் காப் பாற் றும் முயற் சி யில், இன் றைக்கு சர் வ நிச் ச ய மாய் ஆட் டோக் கா ர னி டம் அவ மா னப் ப டத் தான் போகி றோம் என்று பய மாக இருந் தது அவ ளுக்கு.

வீட் டில் எங் கா வது பண மி ருக் குமா? அல மா ரி களை மனக் கண் ணால் துழா வி னாள். ம்கூம். மக ளைப் பார்க் கக் கிளம் பும் போது சில் ல றைக் காசு கள் முதற் கொண்டு எல் லா வற் றை யும் சேக ரித் துக் கொண்டு தான் கிளம் பி யி ருந் தாள். அக் கம் பக் கத் தில் யாரி ட மா வது கடன் வாங் கிக் கொடுக்க முடி யுமா? ஆனால் அவ ச ரத் தில் யார் தரு வார் கள்?

சட் டென்று ஒரு பொறி தட் டி யது. உளுந் தம் பருப்பு டப் பா விற் குள் எப் போதோ போட்டு வைத்து மறந்து போன 50 ரூபாய் ஞாப கத் திற்கு வந் தது. அது பத் தி ர மாய் இப் போ தும் அங் கேயே இருக் குமா? ஒரு வேளை தன் மக னின் கண் ணில் எப் ப வா வ து பட்டு அவன் எடுத் துச் செல வ ழித் தி ருப் பானா? அப் ப டியே இருந் தா லும் அந் தத் தொகை போதுமா? எப் ப வும் இர யில் நிலை யத்தி லி ருந்து வீட் டிற்கு வரு வ தற்கு 50 ரூபாய் தான் தரு வது. ரோடு சரி யா யில்லை என்று கொஞ் சம் சுற் றிக் கொண்டு வேறு போ கி றான். பெட் ரோல் விலை வேறு தின சரி ஏறிக் கொண் டி ருக் கி றது. அதை இதைச் சொல்லி இவன் அதி கம் கேட் கா மல் இருக்க வேண் டும்.

""தென் றல் நகர்ல எந் தத் தெரு பாட் டிம்மா? '' போகிற போக் கில் கேட் டான் ஆட் டோக் கா ரன். இவள் வழி சொன் னாள். வீட்டு வாச லில் ஆட்டோ நின் ற தும், ""கொஞ் சம் இருப்பா. வீட் டுக் குள் போய்த் தான் பணம் எடுத் தா ற ணும்'' என் ற படி அவ ச ர மாய் இறங் கி னாள்.

""இல்ல பாட் டி யம்மா... ஆட்டோ அமர்த் துன பொண்ணே பணம் குடுத் து ருச்சே'' என்று சொன் ன வன், பதிலை எதிர் பார்க் கா மல் ஆட் டோவை விருட் டென்று கிளப் பிப் போனான்.          

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.