சமீ பத் தில் பெங் க ளூரி லி ருந்து சென் னைக் குப் பகல் ரயி லில் வந் தேன். ரயி லில் விற் பனை செய் யப் பட்ட மசால் தோசை யைச் சாப் பிட் டேன். அன்று இரவு முதல் மஞ் சள் மற் றும் பச்சை நிறங் க ளு டன் கலந்த நீர் பேதி யால் அவ திப் ப டு கி றேன். அதிக அள வில் தண் ணீர் தாகம், வியர்வை, மயக் கம் போன் ற வை யும் ஏற் ப டு கின் றன. இது எத னால்? எப் ப டிச் சரி செய் வது?
முரளி, சென்னை- 71
இது போன்ற ஒரு நிலை வரக் கூடாது என்ற எண் ணத் தி னால் தான் ஆபஸ் தம்ப தர்ம சூத் ரம் "கூக் கு ரல் மூலம் விற்பனையாகும் சாப் பா டும்' சமு தா யச் சாப் பா டும் மனி தர் க ளுக்கு வேண் டாம் என்று கூறு கி றது. ஆனால் இன்று பய ணம் மேற் கொள் வது, வழி யில் விற் கப் ப டும் உண வுப் பண் டங் களை வாங் கிச் சாப் பி டு வது என் பது தவிர்க்க முடி யாத நிலை யாக உள் ளது.
உண வுப் பண் டங் க ளைத் திறந்த நிலை யில் விற் பனை செய் வது, அதைக் கையில் ஏந் திக் கொண்டு, அந்த உண வின் பெயரை உரக் கச் சொல் லிக் கூவு வ தன் மூலம், வாயி லுள்ள உமிழ் நீர் அதில் தெறித்து விழு வது, ரயி லின் உள்ளே பல ரும் பல பொருட் களை விற் பனை செய் வ தால் காற் றில் ஏற் ப டும் தொற் றுக் கிரு மி கள் உண வின் மீது படு வது, சமைத் துச் சூடு ஆறிப் போன நிலை யில் அதை வாங் கிச் சாப் பி டு வ தால் ஏற் ப டும் வயிற் றின் மப்பு நிலை போன் ற வற் றா லும் இயற் கை யா கவே நீங் கள் பித் தத் தின் ஆதிக் கம் உள் ள வ ரா கத் தென் ப டு வ தா லும், சாப் பிட்ட தோசை கெட் டுப் போய் பத ன ழிந்து, குட லில் ஜீரண சக் தி யைக் கெடுத்து, நீர் பேதியை உங் க ளுக் குத் தோற் று வித் தி ருக் கி றது. மப்பு நிலை யில் ஏற் ப டும் நீர் பேதியை நிறுத் தி வி டும் மருந் து களை ஆரம்ப நிலை யில் சாப் பி டு வது மிக வும் ஆபத் தா னது.
குட லில் வேண் டாத ஒரு பொருளை உடலே வெளி யேற் றிக் கொண் டி ருக் கும் நிலை யில், அதை அடக்கி குட லி லேயே தங் கச் செய் யும் தவ றான முறை க ளால் மூலம், பவுத் தி ரம், உடல் வீக் கம், சோகை, மண் ணீ ரல் வீக் கம், தோலில் சொறி, படை மற் றும் காய்ச் சல் போன்ற உபா தை கள் ஏற் ப டக் கூ டும்.
பசி யைத் தூண்டி, தன் னைச் சுற் றி யுள்ள மப்பு உண வைச் செரிக் க வும் செய் யக் கூடி ய வ கை யில் அரி சித் திப்பிலி, சுக்கு, தனியா, கோரைக் கிழங்கு, வில் வக் காய் போன் ற வற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து, 200 மி.லி. தண் ணீர் விட்டு, 50 மி.லி. ஆகும் வரை சுண்ட வைத்து, காலை யில் இந் தக் கஷா யத்தை மூன்று நாட் கள் வெறும் வயிற் றில் குடிப் பது நம் முன் னோர் கள் வழக் கம். அதற் கெல் லாம் நேர மில் லாத இந் நாட் க ளில், நீங் கள் ஆயுர் வேத மருந் தா கிய தாடி மாஷ் ட கம் எனும் சூர ணத்தை, ஐந்து கிராம் வீதம் அள வில் எடுத்து, 8 மி.லி. தேன் குழைத்து, காலை, மாலை வெறும் வயிற் றில் நக் கிச் சாப் பி ட வும்.
மசால் தோசை யால் ஏற் பட்ட வயிற்று ஓட் டத்தை நிறுத்த, நீங் கள் காலை உண வாக, மோரை முக் கிய உண வா கக் கொண்ட புழுங் க ல ரி சிக் கஞ் சி யு டன் வேக வைக் கப் பட்ட மாது ளம் ப ழத் தோல், தனியா மற் றும் சுக் கைக் குடிக் க வும். தங் க ளுக்கு ஏற் பட் டுள்ள தண் ணீர் தாகம் தீர, இரவு முழு வ தும் மண் பானை யில் வெட் டி வேர், நன் னாரி வேர், சந் தன சிராத் தூள், நில வேம்பு ஆகி ய வற் றில் ஊறிய தண் ணீரை குடிக் கப் பயன் ப டுத் த வும். பித் தம் குட லில் கிளறி விடப் பட் டுள் ள தால், அதிக வியர் வை யும், மயக் க மும் ஏற் ப டு கின் றன. முன் குறிப் பிட்ட பானைத் தண் ணீர் இந்த உபா தை க ளை யும் நீக் கி வி டும்.
ரயில் பய ணங் க ளில் பசி எடுத் தால் உணவை விற் பனை செய் யும் நப ரி ட மி ருந்து நேர டி யாக வாங் கு வ தை விட, சற்று சிர மம் பார்க் கா மல் நடந்தே சென்று பேண்ட்ரி கார் எனும் பகு தி யி லுள்ள சமை ய ல றை யி லேயே சூடாக தோசைக்கு ஆர் டர் செய்து சாப் பி ட லாம். இதன் மூ லம் பல பின் விளை வு க ளைத் தவிர்க் க லாம். பித் தத் தின் கிளர்ச் சி யால் ஏற் ப டும் பேதி யைக் கட் டுப் ப டுத் து வ தில் ஆட் டின் பால் மிக வும் சிறந் தது. உங் க ளுக் குப் பசி நன் றாக இருந் தால் ஆட் டின் பால் பேதியை நிறுத் து வ து டன் உட லுக்கு நல்ல நிறத் தை யும் வலு வை யும் கூட் டும்.
(தொட ரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.