தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடம்​பைப் பாதிக்​கும் தீய நண்​பர்​கள்!

நான் வசிக் கும் ஊரில் நாளுக் கு நாள் சர்க் கரை நோயா ளி க ளின் எண் ணிக் கை யும் இதய நோயா ளி க ளின் எண் ணிக் கை யும் அதி க ரித்து வரு கி றது. என் னு டைய காலை உணவு பெரும் பா லும் கடை யில் தான். வாரம் இரு

எஸ். சுவாமிநாதன்

நான் வசிக் கும் ஊரில் நாளுக் கு நாள் சர்க் கரை நோயா ளி க ளின் எண் ணிக் கை யும் இதய நோயா ளி க ளின் எண் ணிக் கை யும் அதி க ரித்து வரு கி றது. என் னு டைய காலை உணவு பெரும் பா லும் கடை யில் தான். வாரம் இரு முறை கண் டிப் பாக அசைவ உணவு சாப் பி டு கி றேன். இர வில் சாப் பி டு வது அரிசி உணவு. சர்க் கரை நோயா ளி க ளுக்கு, இதய நோயா ளி க ளுக்கு இத் த கைய உண வும், உண வு மு றை யும் பொருத் த மா ன து தானா?

கோ.ஜெய ராம், கடை ய நல் லூர்.

உடல், சொல், மனம் ஆகி ய வற் றால் மனி தர் கள் தவறு இழைக் கக் கூடும். ஹிம்சை, திருட்டு, முறை யற்ற காமம் ஆகி யவை உட லால் செய் யப் ப டும் பாபச் செயல் க ளா கும். புறங் கூ றல், கடுஞ் சொல், பொய், முரண் பட்ட பேச்சு ஆகி யவை சொல் லால் ஏற் ப டு வன. தீங்கு நினைத் தல், பொறாமை ஆகி யவை மன தால் ஏற் ப டு வன.

இந் தப் பாபச் செயல் க ளைத் தூண் டும் வகை யில் அமை யும் நண் பர் க ளின் சேர்க்கை, அதன் மூலம் ஏற் ப டும் உடல் மற் றும் மனக் கொந் த ளிப்பு, சர்க் கரை உபா தைக் கும், இத யத் தைச் சார்ந்த உபா தை க ளுக் கும் வித் தி டு கின் றன. உணவு வகை க ளால் ஏற் ப டும் கெடு தல் க ளை விட தீய நண் பர் க ளின் சேர்க் கை யால் ஏற் ப டும் கெடு தல் தான் உட லை யும் மன தை யும் வெகு வா கக் கெடுக் கின் றன.

அஷ் டாங்க ஹிரு த யம் எனும் ஆயுர் வேத நூல் மனி தர் கள் கடைப் பி டிக்க வேண் டிய விஷ யங் க ளில் சிரித்த முகம், நன் ன டத்தை, கரு ணை யி னால் மென் மை யா யி ருத் தல் ஆகி ய வற் றைச் சிறந்த குணங் க ளா கக் குறிப் பி டு கி றது. இம் மா தி ரி யான வகை யில் மனி தர் க ளைக் காண் ப த ரி தா கி விட்ட இக் கா லத் தில் நீங் கள் குறிப் பி டும் நோயா ளி க ளின் எண் ணிக்கை அதி க ரிப் பது இயற் கை தான்.

காலை உணவை நீங் கள் பெரும் பா லும் கடை யில் சாப் பிட நிர்ப் பந் தம் உள் ள தா கக் குறிப் பி டு கி றீர் கள். முடிந்த அள வுக் குப் பிற ரு டன் பேசா ம லும், பிறர் பேசு வ தைக் கேட் கா ம லும் மன தில் உண வைத் தவிர வேறு எண் ணம் இல் லா மல் சாப் பி டு வது நல் லது.

காய் க றி க ளை விட அசைவ உணவு வகை க ளில் சுத் தம் அதி கம் தேவைப் ப டு கி றது. எனவே காய் க றி க ளை விட மாமிச உணவு வகை களை நன் றாக வேக வைக்க வேண் டும். அரை கு றை யாய் வெந்த மாமிச உண வைச் சாப் பிட்டு அத னால் ஏற் ப டும் அஜீ ர ணம் பல நோய் க ளுக் குக் கார ணம் ஆக லாம். அத னால் மிக நன் றாக வேக வைக் கப் பட்ட சுத் த மான அசைவ உணவே ஏற் றது.

முடிந் த வரை கறி காய், பால், பழம் என்று சாப் பி ட லாம்.

மனித யந் தி ரம் வேலை செய் வ தற்கு அதன் வெவ் வேறு உறுப் பு கள் இசைந்து தொழில் செய் வ தைப் பொறுத் தி ருக் கி றது. இவை ஓர் ஒழுங் கு மு றை யோடு செய் தால் யந் தி ரம் நன் றாக ஓடிக் கொண் டி ருக் கும். முக் கி ய மான உறுப் பு க ளில் ஒன்று பழு து பட் டி ருந் தா லும் யந் தி ரம் நின் று வி டும்.

உதா ர ண மா கச் சரி யாக ஜீர ண மா கா விட் டால், உடல் முழு வ துமே மந்த நிலையை அடைந் து வி டும். ஆகை யால் அஜீ ர ணத் தை யும், மலச் சிக் க லை யும் அலட் சி ய மா கக் கரு து கி ற வன் ஆரோக் கிய விதி க ளின் அரிச் சு வ டி யைக் கூட அறி யா த வனே. நீங் கள் குறிப் பி டும் நோய் கள் மட் டு மல் லா மல் மேலும் எண் ணற்ற நோய் க ளுக் கெல் லாம் இந்த இரண் டும் தான் அடிப் ப டைக் கார ணங் கள்.

இர வில் அரிசி உண வை விட, கோதுமை, பச் சைப் பயறு கஞ்சி போன் றவை சாப் பிட சிறந் தது. கோதுமை, ரவை உப் புமா, சப் பாத்தி, பச் சைப் பயறு வேக வைத்து சப் பாத் தி யு டன் சாப் பி டு தல் போன்ற வகை யில் நீங் கள் சமைத் துக் கொள் ள லாம். உடல் உட் புற யந் தி ரங் கள் நன் றாக வேலை செய் வ தற்கு இவை உங் க ளுக் குப் பெரி தும் உத வும்.

(தொட ரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT