தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சமோஸô... சிப்ஸ்... பேல்பூரி... தோல்நோய்

எனக்கு வயது 58. உடம்பில் அரிப்பு. சீப்புப் போட்டுச் சொறிவதால் சிவப்பு சிவப்பாக வேர்க்குரு. எரிச்சல். முகம், கை, கால், முழங்கை என்று வேனல் கட்டி, சிரங்கு மாதிரி வெடித்து வலி தொந்தரவு. சர்க்கரை கொஞ்சம்

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 58. உடம்பில் அரிப்பு. சீப்புப் போட்டுச் சொறிவதால் சிவப்பு சிவப்பாக வேர்க்குரு. எரிச்சல். முகம், கை, கால், முழங்கை என்று வேனல் கட்டி, சிரங்கு மாதிரி வெடித்து வலி தொந்தரவு. சர்க்கரை கொஞ்சம் அதிகம். இவை மாற ஆயுர்வேத மருந்துகள், உணவு பத்தியம் என்ன?

பத்மினி நாகசுந்தரம், மதுரை-10.

சிவப்பு நிறம், எரிச்சல், வேனல் கட்டி போன்றவை பித்த தோஷத்தின் ஆதிக்கத்தைத் தெரிவிக்கக் கூடியவை. பித்த சீற்றம், இரத்தம், மாமிசம், தூய நிணநீர் மற்றும் தோல் பகுதிகளைக் கெடுத்து நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகளுடன் உடலில் அரிப்பைத் தோற்றுவிக்கும். இந்த உபாதை ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என பார்ப்போம்.

 மாவுப் பண்டங்களால் ஆன இட்லி, தோசை, வடை, ஆப்பம் போன்றவற்றை அடிக்கடி காலையில் உணவாகச் சாப்பிடுவது. எள், பால், வெல்லம் இவற்றை மிதமிஞ்சிப் பயன்படுத்துவது.

 புது அரிசிச் சோறு, தயிர், மீன் இவற்றையும் உப்பு மற்றும் புளிப்புச் சுவையையும் அதிகமாகப் பயன்படுத்துவது.

 உளுத்தம் பருப்பு, முள்ளங்கி ஆகியவற்றின் அதிக சேர்க்கை.

 உணவு செரிமானமாகாத நிலையில் பகலில் தூங்குவது.

 தானாக வரும் வாந்தியைத் தடுப்பது, மலம், சிறுநீர் போன்ற இயற்கை உந்துதல்களைத் தடுப்பது.

 மிகுதியாக உணவை உண்டு களைப்பையுண்டாக்கும் உடற்பயிற்சி, வேலைகளைப் பெருமளவில் செய்வது.

 ஏசி அறையில் படுத்துத் தூங்கிவிட்டு, எழுந்து கதவைத் திறந்து திடீரென்று சூடாக இருக்கும் அறையில் நுழைவது.

 முன் உண்ட உணவு செரிமானம் ஆகும் முன்பே மறுபடி உண்பது.

 மற்றவர்களுடைய ஆடைகளை அணிவது, மற்றவர் உபயோகிக்கும் துண்டு, சோப்பு, சீப்பு, நகை, கைக்குட்டை, செருப்பு போன்றவற்றைப் பயன்படுத்துவது.

இப்படியாகக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மேலும் நூடூல்ஸ், பேல்பூரி, சமோஸô, சிப்ஸ், ஃப்ரைடு ரைஸ், வெஜ் சூப் போன்ற முன் தலைமுறையினர் அறியாத கேட்டிராத உணவு வகைகளின் சேர்க்கை, அவை வயிற்றில் செய்யும் மாயா ஜாலங்கள் ஆகியவையும் காரணமாகக் கூடும்.

அரிப்பு கபதோஷத்தின் சேர்க்கையில்லாமல் ஏற்படுவதில்லை. ஆக, உங்களுடைய அறிகுறிகளின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது, பித்த கப தோஷங்களின் சீற்றம் தாதுக்களின் வழியாக வெளிப்படுகின்றன என்பதுதான். இந்த இரு தோஷங்களின் சீற்றத்தை அடக்கி, அவற்றை அதனதன் இருப்பிடங்களுக்குத் திருப்பிவிட வேண்டும். அந்த தோஷங்களின் மூலமாகக் கெட்டுப் போன தாதுக்களின் சீரழிவை நீக்கி, அவற்றின் செயல் திறனையும் முடுக்கிவிட வேண்டும். அந்த வகையில் நீங்கள்,

 மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்கவும்.

 படோலகடுரோஹண்யாதி எனும் கஷாயத்தை 15 மி.லி. அளவில் எடுத்து, 60 மி.லி. கொதித்து ஆறிய தண்ணீரைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். பித்த கபங்களின் சீற்றத்தைத் தாதுக்களிலிருந்து பிரித்து, அவற்றை நீர்ப்பேதி மூலம் நீக்கும் இந்தக் கஷாயம், குடிப்பதற்குக் கஷ்டமாக இருந்தாலும் உடலில் ஏற்பட்டுள்ள உபாதையின் தாக்கத்தைக் குறைக்கும் என்பதால், இம்மருந்தை சுமார் 21 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை நீங்கள் சாப்பிடலாம்.

தோல் உபாதை உள்ளவர்களுக்கு எளிதில் செரிமானமாகக் கூடிய அறுபது நாளில் விளையக் கூடிய சம்பா அரிசி, கசப்புச் சுவையுள்ள கீரைகளும், திரிபலா பத்துகிராம், வேப்பம்பட்டை 5 கிராம் எடுத்து, 1 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி அதை அரை லிட்டராகக் குறுக்கி வடிகட்டி, அந்தத் தண்ணீரில் வேக வைத்த சோறும் சாப்பிடுவதற்கு நல்ல உணவு வகைகளாகும். மேலும் பழைய தானியங்கள், வறண்ட நிலப் பகுதியிலுள்ள உயிரினங்களின் புலால், பயிறு, புடலங்காய் இவை மிகவும் நலம் தரக் கூடியவை. எளிதில் செரிக்காத ரவா உப்புமா, பரோட்டா, ரவா தோசை, புளிப்பான ஊறுகாய், பால், தயிர், நீர்ப்பகுதியில் வாழும் உயிரினங்களின் புலாலும், மீன், வெல்லம் போன்றவையும் தவிர்க்கத்தக்கவை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT