வடிவேலு, கருணாஸ் ஆகியோரைத் தொடர்ந்து வையாபுரியும் ஹீரோ ஆகிறார். இந்தப் படத்தை பி.வாசுவின் உதவியாளர் தேவேந்திரன் இயக்குகிறார்.
""ஒரு சாமானியனின் வாழ்க்கையில் நடைபெறும் நகைச்சுவையான சம்பவங்களைப் பற்றிய கதை என்பதால்தான் ஹீரோவாக நடிக்கச் சம்மதித்தேன். இதில் காமெடி, சண்டைக் காட்சி, டூயட் போன்றவை யதார்த்தமாகவே இருக்கும். பஞ்ச் டயலாக், ஹீரோ பில்ட் அப் காட்சிகளெல்லாம் இல்லை'' என்று கூறும் வையாபுரி "கல்யாணமாம் கல்யாணமாம்' என்ற மலையாளப் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்து வருகிறார். மணிரத்னத்தின் "ராவணா' படத்தில் ப்ரியாமணியின் தோழியாக அரவானி வேடத்தில் நடித்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்பு "இளையராகம்' படத்தில் அறிமுகமான வையாபுரி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.