எனக்கு வயது 56 ஆகி றது. எச் டி எல் கொலஸ்ட் ரால் குறை வாக இருக் கி றது என் றும் இதை அதி கப் ப டுத்த ஆங் கில மருத் து வத் தில் மருந்து இல் லை யென் றும் கூறு கின் ற னர். இதை உண வு மு றை யில் அதி கப் ப டுத் தி வி ட லாமா? அல் லது ஆயுர் வே தத் தில் மருந்து உண்டா?
வை.சந் தி ர சே க ரன், பெரம் பூர்.
பல பசி களை இன்று உணர் கி றோம். அத் தனை பசி க ளுக் கும் உணவு அளிக்க விரும் பு கி றோம். பசி வந் த வு டன் எதை யா வது திணித்து அதனை அடக் கு வது விவே க மல்ல. பசி யி லும் காலப் பசி, அகா லப் பசி என இரண்டு இருக் கி ன்றன. அகா லப் பசி யி லும் நோய்ப் பசி, டம் பப் பசி என இரண்டு வகை. நோய்ப் பசியை மருத் து வ மு றை யில் கட் டுப் பாட் டு டன் அணுக வேண் டும். டம் பப் பசியை கட் டுப் பாட் டால் அடக் கக் கற் றுக் கொள்ள வேண் டும்.
காலப் பசியை முறை யு டன் உடல் வாகிற்கு ஏற்ற சிறந்த பொரு ளால் தணிக்க, நீங் கள் குறிப் பி டும் எச் டி எல் கொலஸ்ட் ரால் நல்ல நிலைக்கு உய ரக் கூ டும். டம் பப் பசி யைப் புறக் க ணிக் க லாம். புறக் க ணிப் ப து தான் நல் லது. நோய்ப் பசியை நிதா ன மாக அணுக வேண் டும். காலப் பசி யைப் புறக் க ணிப் பது தவறு.
இன்று விஞ் ஞா னம் பெருஞ் செ யலை - அதிக நேரம் தேவைப் ப டும் செய லைக் குறைந்த நேர மாக்கி- உழைப் பை யும் குறைத்து எளி தாக் கி விட் டது. அத னால் மனி த னால் காலத் தைப் பெரு ம ளவு சேமிக்க முடி கி றது. ஆனால் அதனை வீண டிக்க கிரிக் கெட், ரேடியோ, சினிமா, இண் டர் நெட், பேச்சு, அர சி யல் என்ற பொழு து போக் கு கள் மனி தனை வசப் ப டுத் தி விட் டன. இந் தப் பொழுதை உடல், மன வளர்ச் சிக் கும் பாது காப் பிற் கும் செல விட் டி ருந் தால்? ஆத்ம வளர்ச் சிக் கான சாத னை க ளுக் கா கப் பயன் ப டுத் தி யி ருந் தால்? எச் டி எல் கொலஸ்ட் ரால் எவ் வ ளவு மேம் பட் டி ருக் கும்?
நாள டை வில் தூய் மை யான தெளிந்த தண் ணீ ரி லும், இரத் தி னங் க ளி லும் கூட அழுக்கு வந் து வி டு கி றது. பருவ காலத் திற் கேற் ற படி நடந்து கொள் ளும் மனித உட லி லும் சில சம யங் க ளில் தோஷங் க ளும் மலங் க ளும் தங் கி வி டும். அவ் வித அழுக் கு களை உரிய நேரத் தில் அகற் று வ தற் குத் தயா ராக இருக்க வேண் டும். குடல் உட் பு றக் குழாய் களி லி ருந்து உண வின் சத் தான பகு தி யினை ஏந் திச் செல்ல வேண் டிய குழாய் க ளில் படி யும் இந் தத் தோஷங் கள் மற் றும் மலங் க ளால், எத் த னைப் பல ம ளிக் கும் உண வுப் பொருட் க ளைச் சாப் பிட் டா லும் ஒளி, நிறம், பலம் இவை குறைந் து தான் போகும். நீங் கள் குறிப் பி டும் கொலஸ்ட் ரா லும் கூடாது. அத னால் இந் தப் படி வங் க ளின் சேர்க் கையை வளர விடா மல் அவற் றைக் குடல் சுத்தி முறை க ளால் அப் பு றப் ப டுத்த வேண் டும்.
இந் தக் குடல் சுத்தி முறை க ளுக் குப் "பஞ் ச கர்மா' என்று பெயர். மூக் கி னுள் மருந்தை விட்டு தலைப் பகு தியை சுத் தப் ப டுத் து தல், வாந்தி செய் வித் தல், பேதி மூலம் குட லைச் சுத் தப் ப டுத் து தல், எனிமா முறை யில் மலப் பை யைக் கழு வு தல், கெட்ட ரத் தத் தைக் கீறி எடுத் தல் எனும் இந்த ஐந்து முறை க ளுக் குப் பஞ் ச கர்மா என்று பெயர். இந் தச் சுத்தி முறை களை நன் றா கச் செய்து கொண்ட பிறகு உடலை வளர்க் கும் கீழ்க் கண்ட உணவு முறை யால் உட லைப் பலப் ப டுத்த வேண் டும்.
சம்பா அரிசி, கோதுமை, பச் சைப் பயறு, நெய் முத லிய உள் ளத் திற்கு உகந்த உண வுப் பொருட் கள், பசித் தீ யைத் தூண் டி வி டும் சீர கம், ஓமம், கடுகு, பெருங் கா யம், பட்டை, சோம்பு, மிளகு, குண் டு மி ள காய், தனியா, மஞ் சள் போன் ற வற் றின் சீரான சேர்க்கை, எண் ணெய் தேய்த் துக் குளித் தல் ஆகி ய வற் றின் மூலம் உட லுக்கு அமை தி யும், சுக மும் உண் டா கும். புத்தி, நிறம் இவற் றில் தெளிவு ஏற் ப டு கி றது. புலன் க ளின் கூர்மை, நீண்ட ஆயுள் இவை வளர் கின் றன. எச் டி எல் கொலஸ்ட் ரா லின் தேவை யான அளவு வளர்ச் சி யும், தேவை யற்ற கொலஸ்ட் ரா லின் குறை வும் இதன் மூ லம் பெற லாம்.
(தொட ரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.