அமீர் இயக்கத்தில் "ஜெயம்'ரவி நடிக்கும் "ஆதிபகவன்' படத்தில் கதாநாயகியாக நடிக்க "சிவப்பதிகாரம்' மம்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல். இது குறித்து மம்தாவிடம் கேட்டால்...
""அந்தப் படத்தின் கதையைக் கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது. வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால் முதல் ஷெட்யூலில் நடிக்கவில்லை. மற்றபடி படத்தில் நடிப்பது குறித்து அவர்கள்தான் முறையாக அறிவிக்க வேண்டும்.
தமிழில் "சிவப்பதிகாரம்' படத்தில் நடித்தபோது எனக்கு சினிமாவைப் பற்றி அதிகம் தெரியவில்லை. ஆனால் ஒரு நடிகைக்கு நல்ல நடிகை என்பதை விட கமர்ஷியல் ஹீரோயின் என்பதுதான் பாதுகாப்பு என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன்.
அதனால் இனி கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன்'' என்கிறார் மம்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.