முகப்பு
தினமணி கதிர்

தொழில்: கையில் வித்தை; பையில் கத்தை!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள பாரதி மகளிர் குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உள்ளது. ஒருவர் சணல் நார் பையை உருவாக்குகிறார். ஒருவர் அதை அழகுபடுத்துகிறார். ஒருவர் மலர் அ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:34 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:38 PM

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள பாரதி மகளிர் குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உள்ளது. ஒருவர் சணல் நார் பையை உருவாக்குகிறார். ஒருவர் அதை அழகுபடுத்துகிறார்.

ஒருவர் மலர் அலங்காரம் செய்கிறார். ஒருவர் சேலையில் டிசைன் பிரிண்டிங் செய்கிறார். ஒருவர் கழிவுப் பொருள்களில் இருந்து பொருள்கள் தயாரிக்கிறார். இவர்கள் அனைவரும் இணைந்து குழுவாகச் செயல்பட்டு சாதனைப் பெண்களாக மாறியுள்ளார்கள் என்றால் அது மிகை இல்லை.

குழுவாகச் செயல்படும் ரகசியத்தையும், அதன் வெற்றியையும் பற்றி நிர்வாகிகள் வி.சாந்தி, டி.விஜயலட்சுமி, பி.ராமஜோதி ஆகியோரிடம் பேசினோம்:

Advertisement

இந் தக் குழுவை எப் போது துவக் கி னீர்கள்?

2004-ம் ஆண்டு 12 பேர் சேர்ந்து குழு வைத் துவக் கி னோம். 2006-ம் ஆண்டு மளிகைக் கடை துவக்கினோம். அந்த வியாபாரத்தில் போதிய வருமானம் கிடைக்காததால், பெண்களுக்குத் தேவையான நைட்டி உள்ளிட்டவற்றை வாங்கி வியாபாரம் செய்தோம்.

சணல் நார் பைகள் தயாரிப்புப் பணியை எப்போது துவக்கினீர்கள்?

மாவட்ட மக ளிர் திட் டம் மூலம் 2008-ம் ஆண்டு துவக் கி னோம். டி.கல்லுபட்டியில் உள்ள காந்திநிகேதனில் பயிற்சி பெற்றுதான் சணல் நார் பைகள் தயாரிக்கத் தொடங்கினோம். இந்தப் பைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

எப்படி விற்பனை செய்கிறீர்கள்?

மக ளிர் திட்ட அலு வ லகத்தினர் கண்காட்சிகள் நடைபெறும் இடங்களைக் கூறுவார்கள். அந்த இடங்களுக்குச் சென்று கடை அமைத்து வியாபாரம் செய்கிறோம். அதைப்போல சென்னை உள்பட இடங்களில் கடைகளில் ஆர்டர் பிடித்தும் விற்று வருகிறோம்.

இதற்கான மூலப்பொருளை எங்கு வாங்குகின்றீர்?

இதற்கான மூலப்பொருளைத் துவக்கத்தில் சென்னையில் வாங்கினோம். தற்போது கொல்கத்தாவிலிருந்து வாங்குகிறோம். ஷாப்பிங் பை, கல்லூரி பை, மணிபர்ஸ், கைப்பை, சாப்பாடு கொண்டு செல்லப் பயன்படும் பை எனப் பல வகையான பைகளைத் தயாரிக்கிறோம். எங்களுக்கு வரும் மூலப்பொருளில் கழிவு என எதையும் கழிக்காமல் சிறு துண்டு என்றாலும் ஏதாவது ஒன்றைச் செய்து விற்பனை செய்துவிடுவோம்.

வேறென்ன தயாரிக்கிறீர்கள்?

பிறந்த குழந் தை க ளுக்குப் பயன்படும் ஆயத்த ஆடை, ஷோக்கேஸில் வைக்கப் பயன்படும் அலங்காரப் பூக்கள், சேலையில் ஸ்கிரீன் பிரிண்டிங் மூலம் டிசைன் செய்வது, கழிவுப் பொருள்களில் இருந்து பொருள்கள் தயாரிப்பது எனப் பலவகையானவற்றைத் தயாரித்து வருகிறோம்.

இவற்றை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் தனித்தனியே பயிற்சி பெற்றுள்ளோம். நாங்கள் இணைந்து செயல்படுவதுதான் எங்கள் வெற்றியின் ரகசியம். நாங்கள் கற்றுக்கொண்டதை மகளிர் திட்டம் மூலம் வேறு குழுவினருக்கும் பயிற்சி அளிக்கிறோம்.

உங்கள் குழுவின் வேலைநேரம் பற்றி சொல்லுங்கள்?.

காலை பத்து மணி முதல் மாலை 4 மணி வரை தயாரிப்புப் பணியில் ஈடுபடுவோம். ஆர்டரைப் பொறுத்து தயாரிப்பதால் மாதத்தில் சுமார் 10 நாள் வேலை இருக்கும்.

பணப் பிரச்னையை எவ்வாறு சமாளிக்கின்றீர்?

நாங்கள் வங்கியில் கடனாக 2 லட்சம் பெற்றுள்ளோம்.. மேலும் ஆர் டர் கிடைத் தால் உறுப் பி னர்கள் பணம் போடுவோம். எனவே பணப்பிரச்னை இல்லை.

உங்கள் குழுவின் தனிப்பட்ட சிறப்பு என்ன?

எங் கள் செயல் பா டு களைப் பார்த்து மாவட்ட நிர்வாகம் தற்போது, ராஜபாளையம் மார்க்கெட்டில் உள்ள காதிகிராப்ட் கடையின் ஒரு பகுதியில் எங்கள் தயாரிப்புகளை வைத்து வியாபாரம் செய்ய அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற அனுமதி வேறு எந்தக் குழுவினருக்கும் வழங்கப்படவில்லை.

உங்கள் குழுவின் எதிர்காலத் திட்டம்?

மாவட்ட மக ளிர் திட்ட அலு வ லர் சரோஜா எங்களுக்கு முழு ஆதரவு வழங்கி வருகிறார். அவரது வழிகாட்டுதலின்பேரில் இப்போது சணல் நார் பைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சி செய்து வருகிறோம். ஏற்றுமதியை விரைவில் துவங்கிவிடுவோம் என நம்பிக்கை உள்ளது.

மேலும் எங்களுக்கு எனத் தனிக்கட்டடம் கட்ட வேண்டும் என்பதும் எங்களது எதிர்காலத் திட்டமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.