தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தசைநார்களை வலுவாக்குவோம்!

எனக்கு வயது 48. மழை - குளிர் நாள்களில் முதுகு - இடுப்புப் பகுதிகளில் எனக்கு வலி அதிகமாகிறது. தரையில் படுத்தாலும் தரையில் மெல்லிய விரிப்புப் போட்டுப் படுத்தாலும் தரையின் குளிர்ச்சியால் வலி கூடுகிறது. க

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 48. மழை - குளிர் நாள்களில் முதுகு - இடுப்புப் பகுதிகளில் எனக்கு வலி அதிகமாகிறது. தரையில் படுத்தாலும் தரையில் மெல்லிய விரிப்புப் போட்டுப் படுத்தாலும் தரையின் குளிர்ச்சியால் வலி கூடுகிறது. கருங்கல் தூண், இரும்பு, தகர நாற்காலிகளில் உட்கார்ந்தாலோ, சாய்ந்தாலோ பயங்கரமாக வலிக்கிறது. இதை எப்படிக் குணப்படுத்துவது?

ஜெயராமன், தூத்துக்குடி.

முதுகுத் தண்டுவடத்தைத் தாங்கி நிற்கும் தசைநார்கள், நரம்புகள், தண்டுவட எலும்புகள், எலும்புக் குருத்துகள், எலும்புகளின் நடுவே அமைந்துள்ள வில்லைகள், தண்டுவடத்தின் உள்ளே அமைந்துள்ள சுற்றளவு போன்ற விஷயங்களை ஙதஐ நஇஅச மூலம் நீங்கள் அறிந்து கொள்வது நல்லது. சிகிச்சையைச் சரியாகக் கணிக்கக் கூடிய வகையில் இந்த நஇஅச  தஉடஞதப உதவி செய்வதால் உங்களுடைய உபாதையை விரைவில் மாற்ற இயலும்.

ஆயுர்வேதத்தின் அணுகுமுறை மற்ற மருத்துவமுறைகளிலிருந்து மாறுபடுகிறது. வாதம் எனும் தோஷம், வறட்சி, குளிர்ச்சி, சொரசொரப்பு, நுண்ணியது, நகருதல் எனும் குணங்களைக் கொண்டது. மழை மற்றும் குளிர்நாள்களில் இந்தக் குணங்களின் ஆதிக்கம் நம் உடலில் கூடுவதால், வாததோஷம் எழுச்சி அடைந்து முதுகு, இடுப்பு ஆகிய பகுதிகளிலுள்ள தசைநார்களின் உள்ளே நுழைந்து விடுவதால், அங்குள்ள நரம்புகளைச் சுண்டி இழுக்கக் கூடும். குளிர்ச்சியான பொருள்களின் மீது உடலின் தசைப் பகுதிகள் படும்போது, வலி கூடுவதன் ரகசியம், வாயு தோஷத்தின் குளிர்ச்சி எனும் குணத்தில்தான். குணத்தின் வளர்ச்சியினால்தான் நம் உடலில் செயல்கள் நடைபெறுகின்றன. வெளிப்புறக் குளிர்ச்சியும், தசைகளிலும் எலும்புகளிலும் குடி கொண்டுள்ள வாததோஷத்தின் குளிர்ச்சியும் ஒன்றாக ஒத்துப்போவதால், உங்களுக்கு முதுகு மற்றும் தசைப் பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது.

குளிர்ச்சிக்கு நேர் எதிரானது சூடுதான். சூட்டைத் தசைகளின் ஊடே செலுத்தி அதன்மூலம் அங்குள்ள குளிர்ச்சியை இடம் பெயரச் செய்து, தசைநார்களை வலுப்படுத்த வேண்டும். அதற்குள்ள எளிய சிகிச்சைமுறைகளில் முதன்மையானது, உள்ளங்கைகளைத் தேய்த்துச் சூடாக்கி, முதுகை இதமாகப் பிடித்துவிடத் தெரிந்தவர்கள் முறைப்படி செய்தால் நிவாரணம் கிடைக்கும்.

இரண்டாவதாக, சீதோஷ்ண மாறுபாட்டை சகிக்கும் சக்தி எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கக்கூடும். பலாசீவகந்தாதி எனும் மூலிகைத் தைலத்தை உடல் முழுவதும் தடவி வாரம் இருமுறை அல்லது மூன்றுமுறை வெந்நீரில் குளிப்பது, முதுகுக்கு முக்கியமாக தான் வந்திரம் தைலம், நாராயண தைலம், கார்ப்பாஸôஸ்தியாதி தைலம், கொட்டஞ்சுக்காதி தைலம் இவற்றில் ஒன்றை ஓரிரு மாதங்கள் தொடர்ந்து தினமும் முதுகுக்குத் தேய்த்து வெந்நீரில் குளிப்பது நல்லது. சூடான வீரியம் கொண்ட புங்கு, ஆமணக்கு, எருக்கு, கற்பூரவல்லி போன்ற இலைகளைக் கொண்டு காய்ச்சிய தண்ணீரைத் துண்டால் முக்கிப் பிழிந்து முதுகில் வெதுவெதுப்பாக ஒத்தடம் கொடுப்பதும் நல்லதே.

அச்வகந்தாதி சூர்ணம், அச்வகந்தி லேகியம், தசமூலாரிஷ்டம், யோகராஜகுக்குலு மாத்திரை, சந்திரபிரபாவடீ இவற்றை மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது நல்லது. தசையை வலுப்படுத்துவதில் இம்மருந்துகள் மிகவும் சிறந்தவை.

சிறுபிள்ளைகளை முதுகில் ஏறி மிதிக்கச் சொல்வது, குளிர் பானம் குடித்தல், குளிர்ந்த நீரைக் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்துதல், வெறும் தரையில் படுத்துறங்குதல், உணவில் சூடு ஆறியநிலையில் கொண்டைக் கடலை, பருப்புசாம்பார், மொச்சைக் கொட்டை, வேர்க்கடலை, கடலை எண்ணெய் போன்றவற்றைச் சாப்பிடுதல் ஆகிய செய்யக் கூடாத செயல்களைத் தவிர்க்கவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT