தினமணி கதிர்

திரைக்கதிர்: சட்டத்தோடு விளையாடும் சந்திரசேகரன்!

நீண்ட நாளைக்குப் பின் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் படம் "சட்டப்படி குற்றம்.' விக்ராந்த், ஹரீஸ் கல்யாண், "தாமிரபரணி' படத்தில் நடித்த பானு உள்ளிட்டவர்களுடன் சத்யராஜ், லிவிங்ஸ்டன், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆ

ஜி. அசோக்

நீண்ட நாளைக்குப் பின் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் படம் "சட்டப்படி குற்றம்.' விக்ராந்த், ஹரீஸ் கல்யாண், "தாமிரபரணி' படத்தில் நடித்த பானு உள்ளிட்டவர்களுடன் சத்யராஜ், லிவிங்ஸ்டன், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். படம் குறித்து இயக்குநரிடம் பேசியபோது, ""இளம் தலைமுறைக்கு எழுச்சியையும் சமூகத்தில் ஒரு புரட்சியையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் படமாக இதன் கதைக் களம் அமைந்திருக்கிறது.

தற்போதைய இளைஞர்கள் சமூகத்தின் பால் நிறைய அக்கறை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான படங்கள் குறைவான அளவிலேயே வெளிவருகின்றன. அதை தீர்க்கும் வகையில் இந்தப் படம் இருக்கும். இன்றைய இளம் தலைமுறை விரும்பும் வண்ணம் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறேன். தற்போதைய தமிழ் சினிமாவின் இளம் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறேன்.

"சட்டம் ஒரு இருட்டறை', "சட்டம் ஒரு விளையாட்டு', "சாட்சி', "நான் சிகப்பு மனிதன்', "நீதிக்கு தண்டனை' உள்ளிட்ட படங்களில் இருந்த கதைக் களம் பேசப்பட்டதை போல் இந்தப் படமும் இருக்கும். சீமான் முக்கிய பாத்திரம் ஏற்று இருக்கிறார். அனுபவமிக்க கலைஞர்கள் முக்கிய பாத்திரங்கள் ஏற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

மேன்ஷன் வாழ்க்கை!

வெளி மாவட்டங்களிலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த இளைஞர்களின் வாழ்வை கதைக் களமாக்கி வருகிறார் இயக்குநர் சக்திவேல். "கந்தக்கோட்டை' படத்துக்குப் பின் அவர் இயக்கும் படம் இது. படம் குறித்து அவரிடம் கேட்டபோது, ""களவாணி', "மைனா' மாதிரியான எதார்த்த படங்கள் வெற்றிப் பெறும் சூழல் இப்போது தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது. ஒரு காலத்தில் கமர்ஷியல் படங்கள் மட்டுமே வெற்றி பெறும்.

இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது. இந்த சூழலில் ஒரு படைப்பாளி தன்னை சரியாக அடையாளம் காட்ட முடியும். வெளி மாவட்டங்களில் இருந்து பிழைப்பு தேடி சென்னை மாநகரத்திற்கு வந்து போராடும் இளைஞர்களின் வாழ்வை மிகவும் எதார்த்தமாகப் பதிவு செய்யப் போகிறேன். மேன்ஷன் வாழ்க்கைக்கு பெயர் போன திருவல்லிக்கேணி பகுதிதான் கதைக் களம்.

அவர்களின் காதல், போராட்ட வாழ்வு, வெற்றியில்லா வெறுமை என அனைத்தும் இதில் இருக்கிறது. ராஜேஷ் கனகசபை, அர்ச்சனா ஆகிய புதுமுகங்கள் ஜோடியாக நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மாணவர் எஸ்.பி.பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். மலேசியாவின் திலீப் வர்மன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்'' என்றார் சக்திவேல்.

செக் நாட்டில் சிக் பாடல்!

"தூங்கா நகரம்' படத்தின் பாடல்கள் மற்றும் ரீ ரெக்கார்டிங்கை செக் குடியரசு நாட்டில் உருவாக்கி இருக்கிறார் சுந்தர் சி. பாபு. இது குறித்து அவர் கூறியது: ""செக் குடியரசில் உள்ள பிரபலமான ஸ்டூடியோ கலைஞர்களின் உதவியுடன் பாடல்கள் மிகவும் அருமையாக  வந்துள்ளன.

இசையை வெளிநாட்டில் உள்ள ஸ்டூடியோக்களில் உருவாக்குவதன் காரணம் அங்குள்ள இசைக் கலைஞர்கள்தான். நம்மிடமே பல புதிய டிஜிட்டல் வசதியுள்ள ஸ்டூடியோக்கள் இருக்கிறது. ஆனால் செக் குடியரசு போன்ற நாடுகளில் இசை கலைஞர்களின் திறமை அபரிமிதமானது. 52 கலைஞர்களின் உதவியுடன் ரீ ரெக்கார்டிங் பணிகள் முடிந்தன.  "ஆடு புலி' இந்த மாதம் ரிலீசாகிறது. இதையடுத்து "மார்க்கண்டேயன்', "வேலூர் மாவட்டம்' ஆகிய படங்கள் வெளி வர இருக்கின்றன.

தொடர் ஹிட் பாடல்கள் கொடுத்தும் அதிக படங்கள் கையில் இல்லையே என்ற வருத்தம் இல்லை. வருவதை நன்றாகச் செய்கிறேன். நிறைய படங்களை ஒரே நேரத்தில் ஒப்புக் கொள்வதில்லை. ரீமிக்ஸ் பாடல்களில் எனக்கு ஆர்வம் இல்லை. இதுவரை எந்தப் பாடலையும் பாடவில்லை. அதற்கான பயிற்சிகளை எடுத்து கொண்டு பின்னாளில் பாட வாய்ப்பு இருக்கிறது'' என்றார் சுந்தர்.சி பாபு.

பிரியாவின் பிரியம்!

"பருத்தி வீரன்' படத்துக்குப் பின் தமிழில் எனக்கு நல்ல கேரக்டர்களை யாரும் கொடுக்கவில்லை என வருத்தம் தெரிவித்திருக்கிறார் பிரியாமணி. சமீபத்தில் அவரிடம் பேசியபோது இந்த வருத்தம் வெளிப்பட்டது. ""பருத்தி வீரன்' முத்தழகு கதாபாத்திரம்தான் எனக்கு தேசிய விருது பெற்று தந்தது.

அதற்காக அது போன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.  விதவிதமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் அவ்வாறு மாறுபட்ட கேரக்டர்கள் எனக்கு கிடைப்பதில்லை. கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மாறுபட்ட விதவிதமான கேரக்டர்களில் நடித்து வருகிறேன். கிளாமர் வேடங்களையும் துணிந்து ஏற்கிறேன். ஆனால் தமிழில்தான் எனக்கு நல்ல கேரக்டர்களை யாரும் உருவாக்கி தருவதில்லை.

ஆர்வமாக கதை சொல்ல வரும் புதுமுக இயக்குநர்களும் சொதப்பலான கேரக்டர்களையே முன் வைக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அதிகம் நடிக்க விரும்புகிறேன். மனதுக்குப் பிடித்த கேரக்டர்களை உருவாக்கி கதை சொன்னால் உடனே கால்ஷீட் கொடுக்க தயாராக இருக்கிறேன்'' என்றார் பிரியாமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT