முகப்பு
தினமணி கதிர்

நளபாகம்: வாழைக்காய் சூப்

 தேவையானவை:  வாழைக்காய் - 2  வெங்காயம் - 3  எண்ணெய் - 1 கரண்டி  பால் - 50 மில்லி  ரொட்டி - 3 துண்டுகள்    செய்முறை:முதலில் வாழைக்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தைச் சிறுக நறுக்கி கொள்ளவும்.

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:59 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 11:14 PM

 தேவையானவை:

 வாழைக்காய் - 2

 வெங்காயம் - 3

Advertisement

 எண்ணெய் - 1 கரண்டி

 பால் - 50 மில்லி

 ரொட்டி - 3 துண்டுகள்

 செய்முறை: முதலில் வாழைக்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தைச் சிறுக நறுக்கி கொள்ளவும். ரொட்டித்துண்டுகளை லேசாக ரோஸ்ட் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், வாழைக்காய் ஆகியவற்றை நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு, மிளகுப் பொடி போட்டு கொதிக்க விடவும். வாழைக்காய் நன்றாக வெந்தவுடன் பால் ஊற்றி கலக்கவும். இதில் ரொட்டித் துண்டுகளைப் போட்டு பரிமாற, வாழைக்காய் சூப் சுவையாக இருக்கும்.

தேங்காய் வடாம்

 தேவையானவை:

 அவல் - 400 கிராம்

 தேங்காய் - 1

 காரப்பொடி - 1 கரண்டி

 எலுமிச்சப்பழம் - 2

 உப்பு - தேவையான அளவு

 தயாரிக்கும் விதம்: அவலை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அவல் ஊறியதும் நீரை வடித்துவிட்டு, அதனுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து அரைக்கவும். இதனுடன் காரப்பொடி, உப்பு சேர்த்து எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடவும். பின்னர், இதனை நன்றாக கலக்கி, வெள்ளைத்துணியில் வடாம் போல பிழியவும். நன்கு காய்ந்ததும் உடையாமல் எடுத்து பொரித்துச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.