வேஸ்ட்டாகாமல் டேஸ்டானதாக்க...
1. தேங்காய் பர்பி, மைசூர் பாகு போன்ற இனிப்பு வகைகள் மிச்சப்பட்டுவிட்டதா? கவலையை விடுங்கள். மைதா அல்லது கோதுமை மாவைப் பூரிக்குப் பிசைவதுபோல் பிசைந்து வட்டமாக இட்டு அதனுள் இனிப்புகளைப் பூரணமாக வைத்து மட
1. தேங்காய் பர்பி, மைசூர் பாகு போன்ற இனிப்பு வகைகள் மிச்சப்பட்டுவிட்டதா? கவலையை விடுங்கள். மைதா அல்லது கோதுமை மாவைப் பூரிக்குப் பிசைவதுபோல் பிசைந்து வட்டமாக இட்டு அதனுள் இனிப்புகளைப் பூரணமாக வைத்து மடித்து எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் இனிப்பு சோமாஸ் ரெடி.
2. தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பின்பு அதன் அடிப்பகுதிகளைத் துருவி தயிர் பச்சடியாகவோ, உளுந்துடன் அரைத்து வடையாகவோ செய்து சாப்பிடலாம்.
3. பெங்களூர் கத்தரிக்காய் (செüசெü) தோலை வீசி எறியாதீர்கள். மிளகாய், உளுந்தம் பருப்புடன் வதக்கிய தோலை உப்புப் புளியுடன் அரைத்து எடுத்தால் அருமையான சூப்பர் துவையல் ரெடி.
4. மாவடு ஊறிய தண்ணீரை மாவடு தீர்ந்தபின் கொட்டி விடாதீர்கள். அந்தத் தண்ணீரில் சுண்டைக்காய் வற்றலைப் போட்டு ஊறியதும் காய வைத்து எடுக்கவும். சுண்டைக்காய் கசப்பும் தெரியாது. புதிய சுவையுடனும் இருக்கும்.
5. பகலில் மீந்த சாதத்துடன் சிறிது கடலை மாவு, கோதுமை மாவு சேர்த்துக் கெட்டியாக அரைத்து அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தேவையான உப்புச் சேர்த்துக் கிளறி காய்ந்த எண்ணெய்யில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கலாம்.
6. பால் அதிகமாக மீந்து விட்டால் சர்க்கரை சேர்க்காத கோவை செய்து வைத்துக் கொண்டால்
ஸ்வீட் செய்யும்போது பயன்படுத்தலாம்.
7. தேங்காய்த் தண்ணீரை வீணாக்காமல் ரசம் வைக்கும்போது அதனுடன் சேர்த்து வைத்தால் ரசம் வித்தியாசமாகவும் புதுவிதச் சுவையுடனும் இருக்கும்.
8. தேன் குழலுக்கு அரைத்த மாவு மீந்துவிட்டால் அதைக் கரைத்து உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால் தோசை ருசியாக இருக்கும்.
9. பாயசம் மீந்துவிட்டால், ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். பிறகு ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் பாயசத்தைவிட்டு வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, மாம்பழம், கொய்யா, திராட்சை போன்ற பழத்துண்டுகள் எல்லாவற்றையும் போட்டு ஐஸ் கிரீம் விட்டுப் பரிமாறினால் சுவையான ஃபுரூட் சாலட் தயார்.
10. பாதுஷா, ஜிலேபி, லட்டு போன்ற இனிப்பு வகைகளைச் செய்து முடித்ததும் தட்டில் சர்க்கரை ஜீரா ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த தட்டை அடுப்பில் குறைந்த தீயில் சில விநாடிகள் வைத்தால் சர்க்கரைப் பாகு உருகிவிடும். துருவிய தேங்காய், ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை அதில் போட்டுக் கலந்தால் ருசியான புதுவகை இனிப்பு ரெடி.