தினமணி கதிர்

திரைக்கதிர்

இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகை கீதாபஸ்ராவின் பார்வைச் சுழலில் பந்தாடப்பட்டு தன்னுடைய இதயத்தைப் பறிகொடுத்துள்ளார். கீதாபஸ்ராவின் உறவினர்கள் பலர் லண்டனில்

மனோஜ் கிருஷ்ணா

இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகை கீதாபஸ்ராவின் பார்வைச் சுழலில் பந்தாடப்பட்டு தன்னுடைய இதயத்தைப் பறிகொடுத்துள்ளார். கீதாபஸ்ராவின் உறவினர்கள் பலர் லண்டனில் வசித்து வருவதால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் லண்டனிலேயே திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அதையடுத்து இந்தியாவில் திருமணம் நடைபெறுகிறது.

"கலி கலி மே சோர் ஹை' இந்திப் படப்பிடிப்புக்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு போபால் சென்றிருந்தபோது, வாகனம் ஒன்றில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாயை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளார் ஸ்ரேயா. அதோடு விட்டுவிடாமல் அந்த நாய்க்கு "துரு' எனப் பெயரிட்டு படப்பிடிப்பைக் காண வந்த தன்னுடைய ரசிகர் ஒருவரிடம் கொடுத்து வளர்க்கவும் அன்புக் கட்டளையிட்டிருக்கிறார்.

தமிழ், இந்தி என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தான் இயக்கி நடிக்கும் "விஸ்வரூபம்' படத்துக்கு கதாநாயகியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, ஸ்ரேயா எனப் பலரைத் தேர்ந்தெடுத்து யாரும் பொருத்தமாக இல்லாததால் நாயகி இல்லாமலேயே பாதிப் படத்தை முடித்துவிட்டார் கமல்ஹாசன். தற்போது

பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்டு நியூயார்க்கில் அமெரிக்கா வாழ் இந்திய அழகியாகத் தேர்வு செய்யப்பட்டு, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக உள்ள பூஜா குமாரையும், ஆன்ட்ரியாவையும் கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்புக்காக

ஜோர்டான் நாட்டுக்குப் பறந்திருக்கிறார்.

பிரபல காஸ்ட்யூமரும் த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளின் நெருங்கிய தோழருமான சிட்னி, சென்னை கோபாலபுரத்தில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு நவீன உடற்பயிற்சிக் கூடத்தை உருவாக்கி வருகிறார். இன்னும் தொடங்கப்படாத இந்த ஃபிட்னஸ் சென்ட்டரில் சேர இப்போதே பல முக்கியப் புள்ளிகள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். காரணம், இந்த ஃபிட்னஸ் சென்ட்டரில் முன்னணி நடிகைகளின் கூட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் என்ற நம்பிக்கைதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT