தினமணி கதிர்

ராஜா ரவிவர்மாவின் ஓவிய மரபு

*  ராஜா ரவிவர்மா (1848-1906). பெயரில் "ராஜா' என இருப்பதால் இவர் ராஜா அல்ல. ஆனால், திருவனந்தபுரம் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். கேரள மக்களின் "மறுமக்கத் தாயம்' பாரம்பரியத்தின்படி,அவரது மாமாவின் பெயரான

ராம்குமார்

*  ராஜா ரவிவர்மா (1848-1906). பெயரில் "ராஜா' என இருப்பதால் இவர் ராஜா அல்ல. ஆனால், திருவனந்தபுரம் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். கேரள மக்களின் "மறுமக்கத் தாயம்' பாரம்பரியத்தின்படி,அவரது மாமாவின் பெயரான "ராஜ ராஜவர்மா'வில் வரும் "ராஜ' என்ற பட்டம் அவருடைய பெயருடன் 1904-ல் சேர்க்கப்பட்டு, அப்போது முதல் ராஜா ரவிவர்மா என்றே அழைக்கப்பட்டார்.

 *  அவரது ஓவியங்களில் பல ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்திய இதிகாசக் காட்சிகளை ஐரோப்பியக் கலை அம்சங்களுடன் இழைத்து வரையப்பட்டவை.

 *  தஞ்சாவூர் ஓவியக் கலைப் பாரம்பரியத்தில் முறையான பயிற்சி பெற்றவர்.

 *கிளிமானூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த அவர் 14 வயதில் திருவனந்தபுரம் சென்று அரச குடும்ப ஓவியராகி, அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடமும் பின்னர் டச்சு ஓவியரான தியோடர் ஜென்சனிடமும் பயிற்சி பெற்றார். தைலவண்ண ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடமும் அறிந்து கொண்டார். திருவிதாங்கூர் அரசர் ஆயில்யம் திருநாள் மகாராஜா இவரது ஓவியக்கலை பயிற்சிக்குப் புரவலராக இருந்தார்.

 *  அவரது ஓவியங்களில் கையில் விளக்கேந்திய காரிகை, நளதமயந்தி, ஆலயத்தில் பிச்சை அளிக்கும் பெண்மணி, பழத்துடன் பாவை, தூது சென்ற கிருஷ்ணர், ரிஷிகன்யா, ஜடாயு சகுந்தலை, துஷ்யந்தனுக்கு மடல் எழுதும் சகுந்தலை போன்ற ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.

 *  கேரளாவின் மாவேலிக்கரை அரச குடும்பத்தைச் சேர்ந்த மகாபிரபாவை திருமணம் செய்து கொண்டு அவரது எஞ்சிய வாழ்நாள்களை மைசூர், பரோடா மற்றும் பிற இந்திய நகரங்களில் கழித்தார்.

 *  1873-ல் வியன்னாவில் நடைபெற்ற உலக அளவிலான ஓவியக் கண்காட்சியில் அவரது ஓவியம் முதற்பரிசு பெற்றது.

 *  1893-ல் சிகாகோவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியிலும் அவரது ஓவியங்கள் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றன.

 *  1904-ல் இங்கிலாந்து அரசரின் சார்பாக "கேசரி-ஹிந்த்' என்ற தங்கப்பதக்கம் வைஸ்ராய் கர்சன் பிரபுவால் வழங்கப்பட்டது.

 *  20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை பூஜையறையிலும், வரவேற்பறையிலும் அனைவராலும் பயன்படுத்தப்படும் விநாயகர், மகாவிஷ்ணு, பரமசிவன், லட்சுமி, சரஸ்வதி, வள்ளி தெய்வானையுடன் மயில் மீது முருகன் அமர்ந்திருக்கும் ஓவியம், ராமர் பட்டாபிஷேகக் காட்சி ஆகிய தெய்வப் படங்கள் ராஜா ரவிவர்மாவின் கை வண்ணத்தில் உருவானவைகளே! நமது கடவுளர்களுக்கும் இந்தியப் பெண்மணிகளுக்கும் "உரு' கொடுத்தவர் என்ற பெருமையும் ரவிவர்மாவுக்கு உண்டு.

 *  கடவுள் படங்கள் தவிர்த்து மைசூர் மகாராஜா சாமராஜேந்திர உடையார், மகாராணி லட்சுமி பாயி, புதுக்கோட்டை ராணி ஜானகி சுப்பம்மா அவர்களது பாய் சாகிப், உதயப்பூர் மகாராஜா தர்பார் காட்சி, பரோடா சமஸ்தானத்து மன்னர்-என அரச குடும்பத்தினர் விருப்பத்தை ஏற்று ஓவியங்களைத் தீட்டினார்.

 இன்று இவரது ஓவியங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா ஆர்ட் காலரியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், இவரது ஓவியங்கள் பல நூல் வடிவம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக, ரூபிகா சாவ்ளா எழுத்தோவியத்துடன், மார்பிள் பதிப்பகம் மிகப் பெரிய அளவில் நூலாக வெளியிட்டிருக்கிறது. ரசிக்கத்தக்க நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT