முகப்பு
தினமணி கதிர்

சர்ச்சையில் பிரபஞ்ச அழகி!

பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அங்கோலா நாட்டின் லீலா லோப்ஸ் மீது சர்ச்சை எழுந்துள்ளது. தகுதிச் சுற்றில் பங்கேற்பதற்காக இருப்பிடச் சான்றிதழ் மற்றும் கல்வித் தகுதி சான்றிதழை போலியாக தயாரித்து

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:36 PM
பகிர்:

பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அங்கோலா நாட்டின் லீலா லோப்ஸ் மீது சர்ச்சை எழுந்துள்ளது. தகுதிச் சுற்றில் பங்கேற்பதற்காக இருப்பிடச் சான்றிதழ் மற்றும் கல்வித் தகுதி சான்றிதழை போலியாக தயாரித்து சமர்ப்பித்துள்ளார் என அர்ஜென்டினா நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போலி சான்றிதழ் தயாரித்தவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்ச்சையில் இருந்து வெளி வருவாரா லீலா லோப்ஸ்?

இன்ஷுர் காலம்

ஹாலிவுட் பிரபலங்களில் பலர் தங்கள் உடல் பாகங்களை இன்ஷுர் செய்துள்ளனர். "ஜேம்ஸ்பாண்ட் 007' புகழ் டேனியல் கிரேக் தனது உடலை ரூ. 37.53 கோடிக்கும், இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தனது காலை 70 மில்லியன் டாலருக்கும் இன்ஷுர் செய்துள்ளனர். அமெரிக்க டி.வி. நடிகை அமெரிக்கா ஃபெராரா தனது சிரிப்பை 10 மில்லியன் டாலருக்கும், ஜெனிபர் லோபஸ் தனது குரலை 300 மில்லியன் டாலருக்கும் இன்ஷுர் செய்து வைத்துள்ளனர்.

Advertisement

இந்தியாவின் இழப்பு

இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் இறந்து போகின்றனஎன்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாகும். அதுமட்டுமல்ல; பிரசவத்தின்போது மட்டும் 80 ஆயிரம் பெண்கள் இறந்து போகின்றனராம். முன்னேறாத கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினரின் குழந்தைகள்தான், ஊட்டச்சத்து குறைவால் அதிகம் இறந்து போகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் இறந்து போன குழந்தைகளில் 55 சதவீதம் பழங்குடியினத்தவர்கள்தான் என ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments