முகப்பு
தினமணி கதிர்

கேம்ப் ஃபயர்

சென்னையில் நடைபெற்ற இஸ்ரேல் படவிழாவில் ஆரம்பப் படமாகத் திரையிடப்பட்ட படம்: CAMP FIRE (2004) இயக்குநர்: ஜோசப் ஸெடார். கதை என்னவோ இளைய தலைமுறைப் போராட்டம்தான். கதையில் வரும் சம்பவங்களும் தொனிக்கும் மனித

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:09 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:23 PM

சென்னையில் நடைபெற்ற இஸ்ரேல் படவிழாவில் ஆரம்பப் படமாகத் திரையிடப்பட்ட படம்: CAMP FIRE (2004) இயக்குநர்: ஜோசப் ஸெடார்.

கதை என்னவோ இளைய தலைமுறைப் போராட்டம்தான். கதையில் வரும் சம்பவங்களும் தொனிக்கும் மனித உணர்வுகளும் பொதுவானவையே. இனி கதையைப் பார்ப்போம்:

தலைவலி போய் திருகு வலி வந்த மாதிரி இருந்தது ராக்கேலுக்கு. முரண்டு பிடிக்கும் டீன் ஏஜ் பெண்களை வீட்டில் வைத்துக் கொண்டு கட்டிக் காக்க பாடுபடும் எல்லா அம்மாக்கள் நிலையிலும்தான் அவளும் இருந்தாள்.

Advertisement

ராக்கேலின் முன்னால் இரண்டு பிரச்னைகள் இருந்தன. இளம் விதவையான அவள் தனக்கு ஒரு புதிய தலைவனைத் தேடிக் கொள்ள வேண்டும். தன் இரண்டு டீன் ஏஜ் பெண்களையும் நன்றாக வளர்த்து ஆளாக்க வேண்டும். மூத்தவள் கேட்டி, இளையள் ரோஸலின். இரண்டு பேரையும் நெருங்க அக்கம்பக்கத்து சின்னப் பையன்கள் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ராக்கேலுக்குத் தற்போது இரண்டு ஆண்கள் அறிமுகமாகியிருந்தார்கள். ஒருவர் பாதிரியார், இன்னொருவர் ஒரு சொகுசு சுற்றுலா பஸ்ஸின் உரிமையாளர். அந்த பஸ்ஸின் ஓட்டுநரும் அவரே. அவர் பெயர் யோசே.

அவரை ராக்கேல் ஒருநாள் பொதுச் சந்தையில் சந்தித்தாள். அவர் மிகவும் கண்ணியமான மனிதராகத் தெரிந்தார். பழகும்விதம் அருமை!

""பெண்ணே! இந்த சுற்றுலா பஸ்ஸில் எப்போது வேண்டுமானாலும் நீ பயணிக்கலாம். என் செல்போனுக்கு நீ ஓர் அழைப்பு விடுத்தால் போதும். நான் வண்டியுடன் வந்துவிடுவேன்''

அவள் வழக்கமாகச் செல்லும் அந்தப் பகுதி சர்ச்சின் பணிக்குப் புதிதாக வந்தார் ஒரு பாதிரியார். அவரும் ராக்கேலுடன் பிரியமாகப் பழகத் தொடங்கினார்.

அவள் மனக்குழப்பத்தில் இருக்கும் நேரங்களில் யோசேவுக்கு போன் செய்வாள். உல்லாசப் பயணம் வரும் பயணிகளுக்கு ஊர் சுற்றிக் காட்டிவிட்டு, தன் பணி முடிந்தவுடன் யோசே காலியான பஸ் ஊர்தியுடன் வருவார். இருவரும் இயற்கைக் காட்சிகள் மிகுந்த பகுதிகளுக்குச் செல்வார்கள்.

""ராக்கேல்! நான் உன்னை உயிருக்குயிராக காதலிக்கிறேன். நீ விரும்பினால் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன்'' என்று ஒரு நாள் யோசே மனம் திறந்து பேசினார். அவர் பேச்சு இனித்தது.

அன்று ராக்கேலின் இரண்டு பெண்களும் தங்கள் ஆண் தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரம் கழித்து வீடு திரும்பினர்.

தாயார் எரிமலையாகக் கொதித்துப் பேசினாள். ""நாம் இருக்கும் இந்தக் காலனியில் நான் தலை நிமிர்ந்து நடந்து செல்ல வேண்டும் என்றால், டீன்-ஏஜ் பெண்களான நீங்கள் இருவரும் சிறிது கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். கண்டபடி பயல்களுடன் ஊர் சுற்றக்கூடாது''

தாயாரின் நியாயமான கோபத்தைப் புரிந்து கொள்ளாமல், இரண்டு சிறு பெண்களும், காட்டுக் கூச்சல் போட்டு சண்டையிட்டனர்.

ராக்கேலுக்குத் தலை "விண் விண்' என்று தெறித்தது. யோசேவுக்கு போன் போட்டாள். அவர் தன் பஸ்ûஸ எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். இயற்கை வெளிகளுக்குப் பறந்தார்கள். ஓர் ஓடை அருகே பஸ்ûஸ நிறுத்தினார் யோசே.

இருவரும் பஸ்ûஸவிட்டு இறங்கி மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். யோசே ராக்கேலின் கையை அன்புடன் பற்றிக் கொண்டார்.

""ராகேல்! நான் மனம் திறந்து பேசியும் நீ முடிவைச் சொல்லவில்லையே! ஒருவேளை என்னை விடச் சிறந்த இரண்டாம் கணவன், கிடைக்கக்கூடும் என்று காத்திருக்கிறாயா?''

ராக்கேலுக்கு இதயத்தில் முள் குத்தியது போல வலித்தது!

""சீக்கிரம் என் முடிவைச் சொல்கிறேன்'' என்றாள். அவள் குரலில் நடுக்கம் இருந்தது.

""அம்மா! இன்றிரவு எங்கள் நண்பர்கள் எல்லாம் தீ வளர்த்து, அதைச் சுற்றி ஆடிப் பாடப் போகிறோம்! போய் வர நீ அனுமதிக்க வேண்டும்'' என்றாள் மூத்தப் பெண்.

""பொழுதோடு வீடு திரும்பிவிடுங்கள். இரவில் அதிக நேரம் ஆண் நண்பர்களுடன் தங்க வேண்டாம்!'' என்று ராக்கேல் கண்டிப்புடன் சொன்னாள்.

பெரிதாகத் தீ முட்டினார்கள் அவர்கள். ஆறேழு டீன் ஏஜ் பையன்கள் அந்தக் குழுவில், இவர்கள் இரண்டு பேர் மட்டுமே பெண்கள்.

தீயைச் சுற்றி ஆடிப் பாடினார்கள். அப்புறம் ஒன்றாக அமர்ந்து கொண்டு தின்பண்டங்களைக் கொறித்தார்கள். ஆபாச ஜோக்குகளைச் சொல்லிச் சிரித்தார்கள்.

கேட்டின் தங்கையிடம், ""நீ போய் அந்தக் காரில் அமர்ந்து கொள்'' என்று கண்டிப்புடன் சொன்னார்கள். அவள் போய்விட்டாள்.

கேட்டியிடம் ""உன்னைத் தொட்டு மட்டுமே பார்ப்போம்'' என்று சில்மிஷம் செய்தார்கள்.

இதைத் தூரத்தில் இருந்து ஒரு விஷமி பார்த்துவிட்டான். கேட்டி முரண்டு பிடித்தாள். காரியங்கள் எல்லை மீறிச் சென்றுவிடவில்லை!

ராக்கேலின் காலனி அருகே இருந்த ஒரு பெரிய சுவற்றில் அந்த விஷமி ஆபாசமாக எழுதிவிட்டான்.

"தீ வளர்த்த அன்று இரவு ராக்கேல் வீட்டுப் பெண்கள் கெட்டுப் போய்விட்டார்கள்' என்று சுவர் வாசகங்கள் இருந்தன.

ராக்கேலின் அண்டை வீட்டார் வந்து சொன்னதும், ராக்கேலுக்குத் தலை இறக்கமாகப் போய்விட்டது. தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். அடர்த்தியாக சுண்ணாம்பு அடித்து சுவர் எழுத்துகளை ராக்கேல் மறைத்துவிட்டாள். பெண்களுக்குப் புத்தி சொன்னாள். அவர்கள் ஆக்ரோஷமாக சண்டை போடத் தொடங்கினார்கள்.

யோசேவுக்கு போன் செய்தாள். காலியான பஸ்ஸýடன் யோசே வந்து சேர்ந்தார். இருவரும் பயணம் புறப்பட்டனர்.

ஓர் ஏகாந்தமான இடத்தில் யோசேயிடம் அழத் தொடங்கினாள். தங்கள் குடும்பத்துக்கு நேர்ந்த அவமானத்தைச் சொன்னாள்.

""சின்னப் பெண்கள்தானே! அறியாத வயது. நான் அவர்கள் மனதில் படும்படி எடுத்துச் சொல்லித் திருத்துவேன்!'' என்றார் யோசே.

""உங்களை என் கணவராக ஏற்றுக்கொள்ள எனக்குப் பரிபூரணச் சம்மதம்'' என்று கூறி அவர் மார்பில் முகம் புதைத்தாள் ராக்கேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.