தினமணி கதிர்

திரைக்கதிர்: "3 இடியட்ஸ்' கரீனா கபூரா? "நண்பன்' இயானாவா?

இனி வில்லனாக நடிக்க மாட்டேன்; விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் உறுதியோடு இருந்த கரணுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததால் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றும் திட்டத்தில் இருந்தார். அதற்கேற்ப எ

மனோஜ் கிருஷ்ணா

இனி வில்லனாக நடிக்க மாட்டேன்; விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் உறுதியோடு இருந்த கரணுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததால் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றும் திட்டத்தில் இருந்தார். அதற்கேற்ப எளிதில் யாருக்கும் அமையாத ஒரு விளம்பர வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

இதைப் பார்த்து பிரபல முன்னணி நடிகர்களாகவும் விளம்பர நடிகர்களாகவும் உள்ளவர்களே வாய் பிளக்கிறார்கள். பிரபல மஹிந்திரா நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விளம்பரம்தான் அது. இதில் கூட பலருக்கு ஆச்சரியமில்லை. ஆனால் கரணுடன் நடிப்பவர் பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர் என்பதைக் கேள்விப்பட்ட பலரால் அதைத் தாங்கத்தான் முடியவில்லை. கரண்-கரீனா கூட்டணியில்

இளமையுடனும் இனிமையுடனும் உருவாகியிருக்கும் இந்த விளம்பரப் படம், கரணுக்கு மேலும் பல விளம்பரங்களை அள்ளித்தர வாய்ப்பிருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

பாலிவுட்டில் ஹிட் ஆன "3 இடியட்ஸ்' படத்தை ஷங்கர் தமிழில் ரீமேக் செய்தாலும் செய்தார்... கோலிவுட்டில் "3 இடியட்ஸ்' கரீனா கபூரா? "நண்பன்' இலியானாவா? யார் பெஸ்ட்? என்று இரு படங்களையும் பார்த்தவர்கள் பட்டிமன்றம் நடத்தாத குறைதான். இலியானா அழகுதான்; பெல்லி நடனம் ஓ.கே. தான். லேடிஸ் ஜின் அடித்துவிட்டு செய்யும் ரகளையெல்லாம் "கிக்' ரகம்தான். ஆனாலும் ஒரிஜினல் "3 இடியட்ஸ்' பதிப்பில் கரீனாவின் காந்த விழிப் பார்வை பரவவிட்ட பரவசம், காட்சிக்கு காட்சி வெளிப்பட்ட

நவரசம் குறிப்பாக, அந்தப் பிரசவக் காட்சியில் பார்வையாளர்களை பதற்றத்துடன் இருக்கை நுனியில் அமர வைத்த அற்புதமான நடிப்பு போன்றவற்றுக்கு முன்பு இலியானாவை ஒப்பிட்டால் "பெர்ஃபார்மென்ஸ்' என்பது பூஜ்ஜியம்தான்... அவருடைய சைஸ் ஜீரோ டிகிரி இடுப்பைப் போல என்பதுதான் ரிசல்ட்!

ஒரு படம் ஹிட் ஆனாலே அடுத்து, என் படத்தில் அஸின்தான் கதாநாயகி, அனுஷ்காதான் கதாநாயகி என வீம்பு பிடிக்கும் நடிகர்கள் மத்தியில் விதார்த் வித்தியாசமாகப் பேசுகிறார். "மைனா' மூலம் கவனம் ஈர்த்த இவர் "கொள்ளைக்காரன்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பின் மூலம் மினிமம் கியாரண்ட்டி ஹீரோவாகியிருக்கிறார்.

உங்களுடன் நடித்த அமலாபால் உச்சத்துக்குப் போய்விட்டார்; அவருடன் ஜோடி சேர்ந்தால் உங்கள் படத்துக்கு இன்னும் நல்ல ஓபனிங் கிடைக்குமே என்று கேட்டபோது...

""ஒரு படத்தில் யாரை கதாநாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்பதை இயக்குநர்தான் முடிவு செய்ய வேண்டும். அப்படித்தான் அமலாபாலுடன் நடித்தேன். என்னுடன் நடித்தவர் முன்னணி நடிகையானதில் எனக்கு சந்தோஷம்தான். ஒரே படத்தில் ஸ்டார் ஆவது நடிகர்களை விட நடிகைகளுக்கு சுலபமான விஷயம். என்னைப் போன்றவர்கள் எல்லாம் இன்னும் உழைக்க வேண்டியிருக்கிறது. அதுவரை நமக்கு அனுஷ்கா, அஸினெல்லாம் சரிப்பட்டு வராது. நல்ல கதையில் திறமையானவர்களுடன் நடிக்கவே விருப்பம்'' என்றார்.

நல்ல நடிப்பாற்றல் இருந்தாலும், "படப்பிடிப்புக்குக் குறித்த நேரத்தில் வரமாட்டார்', "தாமதமாக வந்தாலும் தன்னுடைய போர்ஷன் முடிந்தவுடன் புறப்பட்டு விடுவார்' என்றெல்லாம் பிரகாஷ்ராஜைப் பற்றி செய்திகள் வருவது வழக்கம். அவை உண்மையும் கூட.

ஆனால் பிரகாஷ்ராஜின் இரண்டாவது திருமணத்துக்குப் பிறகு இப்போது நிலைமை மாறிவிட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக இருந்தாலும் குறித்த நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறார்; யாரையும் கடுமையாகப் பேசுவதில்லை; சக நடிகர்களுடன் நல்ல முறையில் ஒத்துழைக்கிறார் என்ற நற்பெயரைப் பெற்றிருக்கிறார். இதற்குக் காரணம் யார் அல்லது எந்தச் சம்பவம் போன்ற விஷயங்கள் தெரியாவிட்டாலும் பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் சந்தோஷத்தில் உள்ளனர்.

எம்.ஜி.ஆர்., ரஜினி உள்பட பலர் தங்களது படங்களில் சிறுவர்களுக்குத் தேவையான நல்ல விஷயங்களைக் காட்சிகள், பாடல்கள் மூலம் உணர்த்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள். அந்த வரிசையில் சூர்யாவும் இப்போது சேர்ந்திருக்கிறார். ஆனால் படத்தில் வரும் பாடல்களில் அறிவுரை சொல்லாமல் "நன்கு படிக்க வேண்டும்; பெற்றோர், ஆசிரியர்களை மதிக்க வேண்டும். பென்சிலால் காது குடையக் கூடாது; ஷார்ப்னரில் விரலை விடக்கூடாது; காம்பûஸ வைத்து விளையாடக் கூடாது' போன்ற விஷயங்களை தன் குரலிலேயே பதிவு செய்து அதை டி.வி.டி. வடிவில் தயாரித்திருக்கிறார். அந்த டி.வி.டி.களை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கும் அனுப்பியிருக்கிறார். இலவசமாகவா?

கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டில் பாதம் பதித்த அஸினுக்கு "மிஸ் கூல்' என்ற பெயர் இருக்கிறது. தான் ஜோடியாக நடிக்கும் "கான்' நடிகர்களுடன் காதல் என்று அவ்வப்போது செய்திகள் வந்தாலும் அவற்றை "ஸ்போர்ட்டிவ்' ஆக எடுத்துக்கொண்டு அனைவரிடமும் சகஜமாகப் பழகி வருகிறார். இதனால் பாலிவுட் ரசிகர்களுக்கு அஸின் மீது நம்ம வீட்டுப் பெண் என்ற பாசம். அதனால் அவருக்குக் கடிதங்கள், மெயில்கள் அனுப்பும் பலரும் "அஸின் பெஹன்ஜி' (சகோதரி) என்றே குறிப்பிட்டு எழுதி வருகிறார்கள். இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று தன்னைச் சந்திப்பவர்களிடமெல்லாம் ரசிகர் புராணம் பாடி வருகிறார் இந்த பாலிவுட்டின் புதிய பெஹன்ஜி.

தமிழில் "ஓம்', "காட்டுப் புலி' உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அர்ஜுன் கைவசம் உள்ளன. அவற்றின் வெளியீடும் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. முன்பு இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்ட போது தானே இயக்கி, நடித்து, தயாரித்த "பிரதாப்' படத்தின் மூலம் தமிழில் மீண்டும் காலூன்றினார் அர்ஜுன். தற்போதும் அதே முடிவை எடுத்திருக்கிறார் வேறுவிதமாக. தனக்குப் பெரிய பிரேக் கொடுத்த "பிரதாப்' படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து கன்னடப் படவுலகில் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறார் அர்ஜுன்.

இந்தியக் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் விரைவில் பாலிவுட் படங்களில் தலைகாட்டவுள்ளார். கிரிக்கெட்டும் சினிமாவும் எனது இரு கண்கள். இரண்டிலும் சாதனை படைப்பதே என் லட்சியம் என்றெல்லாம் அவ்வப்போது டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பட்டன்களைத் தட்டி வருகிறார் இந்தக் கோபக்கார இளைஞர். சினிமாவில் நுழைவதை முன்னிட்டு "தேஸ் ஹம்' என்ற இசை ஆல்பத்தைத் தயாரித்து விரைவில் வெளியிடவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT