சமைத்தவர்கள் 1050 பேர்! சாப்பிட்டவர்கள் 15 ஆயிரம் பேர்!
உலகத்திலேயே மிகவும் கடினமான - மிகவும் போரடிக்கும் - வேலை எது? என்று இல்லத்தரசிகளைக் கேட்டுப் பாருங்கள்... உடனே சொல்வார்கள்... சமையல் வேலைதான் என்று. நான்கைந்து பேருக்குச் சமைப்பதே மிகவும் கடினமானமான வ
உலகத்திலேயே மிகவும் கடினமான - மிகவும் போரடிக்கும் - வேலை எது? என்று இல்லத்தரசிகளைக் கேட்டுப் பாருங்கள்... உடனே சொல்வார்கள்... சமையல் வேலைதான் என்று. நான்கைந்து பேருக்குச் சமைப்பதே மிகவும் கடினமானமான வேலையாக இருக்கும்போது ஒரே நேரத்தில்
15 ஆயிரம் பேருக்கு 3 மணி நேரத்துக்குள் சமைப்பதென்றால்...? இப்படிப்பட்ட சாதனைகளைச் சத்தமில்லாமல் செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த என்.குமார்.
கடந்த மாதம் சென்னை திருவேற்காட்டில் நடந்த 1006 ஜோடிகளின் திருமணத்துக்குச் சமையல் செய்தபோதுதான் இந்தச் சாதனை நிகழ்ந்தது.
எப்படி இது சாத்தியம்? எத்தனை பேர் சமைத்தார்கள்? எவ்வளவு பெரிய சமையல் கூடம் தேவை? என்பன போன்ற கேள்விகளுடன் அவரை அணுகினோம்:
""இதுவரை மூன்று முறை திருவேற்காட்டில் இப்படிப்பட்ட திருமண விழாக்களுக்கு எங்கள் குழு சமைத்திருக்கிறது. இது தெய்வத்தின் அனுக்கிரகத்தால் நிகழ்ந்ததாகவே நான் நினைக்கிறேன். தமிழக முதல்வர் எங்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார்.
15 ஆயிரம் பேருக்குச் சமைப்பது எங்களுக்குச் சிரமமாக இல்லை. எனது தகப்பனார் அறுசுவை நடராஜனிடம் நாங்கள் பெற்ற பயிற்சிதான் இதற்கு அடிப்படை. எங்கள் குடும்பமே சமையல் குடும்பமாக இருப்பதால் எல்லாரும் அன்று நேரில் களத்தில் இறங்கினர். அதுமட்டுமல்ல, எங்களிடம் நீண்டகாலம் பயிற்சி பெற்ற பலர் அன்றைய தினம் அங்கே வந்து ஒத்துழைப்புக் கொடுத்தனர். 1050 பேர் சமையல் வேலையில் ஈடுபட்டார்கள். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தனர். இதுபோன்று அனைவருடைய ஒத்துழைப்பும் இருந்ததால்தான் எங்களால் திட்டமிட்டபடி சமைக்க முடிந்தது.
முதல் நாள் இரவு உணவு, காலை டிபன், மதியம் உணவு என்று மூன்று வேளைகளுக்கு நாங்கள் சமைத்தோம். காலை, இரவு உணவுகளில் பத்துக்கும் மேற்பட்ட ஐட்டங்கள் இருந்தன. அதிகாலை 2.30 க்கு ஆரம்பித்த காலை உணவுக்கான சமையல் 5.00 மணிக்கு முடிந்துவிட்டது. ஐந்து மணியிலிருந்து 6.00 மணி வரை பரிமாறினோம். அப்புறம் திருமணம் முடிந்து காலை 10.30 மணிக்கு மதிய உணவு சமைத்துவிட்டோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சமையல் வேலைக்காக மொத்தம் 15 கல்யாண மண்டபங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எல்லா இடங்களிலும் சமைத்த உணவு வகைகள் ஒன்றே. சாதாரண மனிதர் முதல் அமைச்சர்கள் வரை எல்லாருக்கும் ஒரே மாதிரியான உணவுகளையே பரிமாறினோம்.
இவ்வாறு பெரிய அளவில் சமைப்பது எங்களுக்குப் பழக்கமான ஒன்றுதான். 1964 இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்காகச் சமைத்திருக்கிறோம். கும்பகோணம் மகாமகத்தின் போதும், புட்டபர்த்தி சாய்பாபா ஆலய விழாவிலும் சமைத்திருக்கிறோம்'' என்கிறார் பெருமையுடன்.