விளையாட்டு வீரர் டால்ஸ்டாய்
டால்ஸ்டாய் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார் என்பது பலருக்குத் தெரியாது. யாஸ்னாயா போஸ்யானா என்ற ஊரில் குழந்தைகளுக்கென டால்ஸ்டாய் ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து, அதில் அவரே ஆசிரியராகப் பணியாற்றினார்.
டால்ஸ்டாய் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார் என்பது பலருக்குத் தெரியாது. யாஸ்னாயா போஸ்யானா என்ற ஊரில் குழந்தைகளுக்கென டால்ஸ்டாய் ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து, அதில் அவரே ஆசிரியராகப் பணியாற்றினார். டால்ஸ்டாய் பார் விளையாட்டில் தேர்ச்சி பெற்றிருந்தார். குதிரையின் மீது துள்ளி ஏறி அமர்வார். 72 பவுண்டு எடையை அநாயாசமாகத் தூக்குவார். உடற்பயிற்சி விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். அவரது 68 வயதில் 20 வயதேயான பியானோ கலைஞர் அலெக்சாண்டர் கோல்டன் லீசர் என்பவருடன் ஓட்டப் பந்தயப் போட்டி நடத்தினார். அதில் டால்ஸ்டாய்தான் வெற்றி பெற்றார்.
பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள்
இந்தியாவின் பசுமைப்புரட்சிக்கு ஆதாரமே மெக்ஸிகோ நாட்டிலிருந்து வந்த ஒரு குட்டை ரக கோதுமைதான். இந்தியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க அறிஞர் நார்மன் போலா பரிசாகக் கொடுத்த கைப்பிடி கோதுமைதான் இந்திய விஞ்ஞானிகள் புதுரக கோதுமையை உருவாக்க ஆதாரமாயிற்று.
நெல்லும் அது போலத்தான். சி.சுப்பிரமணியம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஒருமுறை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்குப் போயிருந்தார். உலக நெல் ஆராய்ச்சி நிலையம் இருக்கும் நாடு அது. நெல் வயலே சுற்றுலாத்தலமாக இருக்கும் அற்புத நாடு. சுப்பிரமணியத்துக்கு பிலிப்பைன்ஸ் பாரம்பரிய முறைப்படி நெல்மணி நிரம்பிய களஞ்சியம் ஒன்றை "பொக்கே' போல அன்பளிப்பாக அளித்தார்களாம். அதிலிருந்த "ஜப்பானிகா' என்ற நெல் வகையுடன் இந்திய நெல்வகைகளை (இண்டிகா) கலப்பினம் செய்து தான் ஏ.டி.டி (அஈப) வகைகளை உருவாக்கியதாகக் கூறுவார்கள்.
ஓவிய மாடல்
லியானார்டோ டாவின்சியின் முன்பு அமர்ந்து போஸ் கொடுத்த விசாதியா கண்டா என்பவர் டாவின்சியின் நகைச்சுவைப் பேட்டிகளை ரசித்தபடி மூன்றாண்டுகள் கொடுத்த போஸ்தான் உலகம் போற்றும் மோனலிசாவாக உருவாகியது. இத்தனைக்கும் அவரது முகம் அம்மை வடுக்கள் நிறைந்த முகமாகும்.
தாமதமாக வந்த நெப்போலியன்
நெப்போலியன் தனது மனைவி ஜோசபைனைவிட ஆறு வயது இளையவர். நேரம்தான் அனைத்தும் என்று காலத்தைப் பொன் போல் போற்றிய நெப்போலியன் தனது திருமணத்துக்கு மட்டும் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தார்.