தினமணி கதிர்

திரைக்கதிர்

3படத்தை விற்ற வகையில் தனுஷ் குடும்பத்தாருக்கு ஏகப்பட்ட லாபம். ஆனால் வாங்கி வெளியிட்டவர்களுக்கு பெருத்த நஷ்டம். இதை ஈடுகட்டும் விதமாக ஒரு புதிய படத்தைத் தயாரித்து மிகக் குறைந்த தொகைக்கு விநியோகஸ்தர்களு

மனோஜ் கிருஷ்ணா

3படத்தை விற்ற வகையில் தனுஷ் குடும்பத்தாருக்கு ஏகப்பட்ட லாபம். ஆனால் வாங்கி வெளியிட்டவர்களுக்கு பெருத்த நஷ்டம். இதை ஈடுகட்டும் விதமாக ஒரு புதிய படத்தைத் தயாரித்து மிகக் குறைந்த தொகைக்கு விநியோகஸ்தர்களுக்கு அளிக்கவுள்ளார் தனுஷ். இதில் அவர் நடிக்கவில்லை. "3' படத்தில் காமெடிக்கு உத்தரவாதம் அளித்த சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் செந்தில் இயக்குகிறார்.

அமெரிக்காவின் பிரபலமான ஏஎஸ்சி (ASC-American Society of Cinematographers) கிளப்பில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன். இதுவரை ஹாலிவுட் ஜாம்பவான்கள் மட்டுமே இடம்பெற்று வந்த இந்த கிளப்பில் இந்தியர் ஒருவர் இடம்பெறுவது இதுவே முதல் முறை.

ஹன்சிகா மோத்வானி தன்னுடைய பெயரில் இருக்கும் மோத்வானியை எடுத்துவிட்டார். தன்னைச் சந்திக்கும் பத்திரிகையாளர்களிடம் இனிமேல் ஹன்சிகா என்று மட்டுமே எழுதுங்கள் என வேண்டுகோள் வைக்கிறார். காரணம் கேட்டால்... ""நான் 1991-ம் வருடம் ஆகஸ்ட் 9-ம் தேதி பிறந்தேன். எனக்கு ஒன்பதுதான் ராசியான எண். என் பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது நியூமராலஜிப்படி 9 வரும். ஆனால் என் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் 1 தான் வருகிறது. அதனால்தான் "மோத்வானி'யை நீக்கிவிட்டேன்'' என்கிறார்.

வேலூர் வி.ஐ.டி.யில் பயோடெக் படித்த காலகட்டத்தில் இருந்து இப்போது வரை அஜித்தின் தீவிர ரசிகையாக இருக்கிறார் பிந்து மாதவி. பள்ளி நாள்களிலிருந்து அஜித்தின் புதிய படங்களை முதல் நாளே பார்த்துவிடுவார். "தல'யுடன் ஒரு படத்தில் ஒரு சிறிய வேடத்திலாவது தலை காட்டிவிட வேண்டும் என்பதுதான் இவரது சினிமா லட்சியமாம். அஜித்துடன் நடிப்பது என்றால் ஒரு பைசா கூட சம்பளம் வாங்க மாட்டேன் எனக் கூறி வருகிறார்.

"வாமனன்' படத்தை இயக்கிய அகமது இயக்கும் "என்றென்றும் புன்னகை' படத்தில் ஜீவாவுடன் முதல்முறையாக நடிக்கிறார் த்ரிஷா. கதைப்படி இன்னொரு நாயகியும் தேவை என்று கருதிய இயக்குநர், தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதையறிந்த த்ரிஷா, படத்தில் ஒரு கதாநாயகி என்றுதானே சொன்னீர்கள்; இப்போது திடீரென இன்னொரு கதாநாயகியை ஒப்பந்தம் செய்தால் எனக்கு எப்படி முக்கியத்துவம் இருக்கும்?'' என சண்டை பிடித்தவரை ஒரு வழியாக சமாதானம் செய்திருக்கிறார் இயக்குநர். இதையடுத்து ""இன்னொரு கதாநாயகி என்றால் தமிழ், தெலுங்கு ஃபீல்டு தவிர மற்ற மொழி நடிகைகள் என்றால் ஓ.கே.'' என்று சற்று இறங்கி வந்துள்ளார் த்ரிஷா. இப்போது அந்த வேடத்தில் பாலிவுட்டின் பிரபல மாடல் லிசா ஹெய்டன் நடிக்கிறார்.

 "சமர்' படத்தில் நடித்து வரும் விஷால் அதையடுத்து சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் விஷாலுக்கு மூன்று வேடங்கள். இந்தப் படத்துக்காக MGR என்ற தலைப்பைப் பதிவு செய்திருக்கிறார் சுந்தர்.சி. "படம் தொடங்கியவுடன் இந்த டைட்டிலைப் பயன்படுத்தக் கூடாது என பல தரப்பிலிருந்தும் நெருக்குதல் வரும்; அதனால் வேறு டைட்டிலை தேர்வு செய்யுங்கள்' என அவரது நல விரும்பிகள் கூறியுள்ளனர்.

"மதன், கஜா, ராஜா ஆகிய மூன்று பெயர்களின் ஆங்கில முதல் எழுத்துகளை வைத்துத்தான் டைட்டிலை அமைத்துள்ளேன்; பிரச்னை வந்தால் மாற்றிக்கொள்ளலாம்' எனக் கூறிவிட்டாராம் சுந்தர்.சி.

 கார்த்தி-தமன்னா நடித்த "சிறுத்தை' படத்தை "ரெüடி ரத்தோர்' என்கிற பெயரில் ஹிந்தியில் இயக்கி வருகிறார் பிரபுதேவா. பாலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படத்தில் அக்ஷய்குமார்-சோனாக்ஷி ஜோடி நடிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக ஹிந்திக்குச் செல்கிறார் விஜய். ஆம்; இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் விஜய் நடனமாடுகிறார். நடன இயக்கமும் பிரபுதேவாதான்.

 சன் பிக்சர்ஸ் போல விரைவில் ஜெயா பிக்சர்ஸரும் தொடங்கப்படவுள்ளதாக சின்னத்திரை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இதன் மூலம் படங்களை வாங்கி வெளியிடும் திட்டத்தில் இருக்கிறதாம் ஜெயா டி.வி. அதற்காக முதல் கட்டமாக கமல்ஹாசனின் "விஸ்வரூபம்', ரஜினிகாந்தின் "கோச்சடையான்' படங்களை வாங்கி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஜெயா பிக்சர்ஸ் எனக் கூறப்படுகிறது.

 தமிழில் சரளமாகப் பேசினாலும் ஆர்யாவுக்கு இதுவரை தமிழை சரியாக எழுதப் படிக்கத் தெரியாது. எல்லாமே ஆங்கிலம்தான். தன்னைப் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை நண்பர்கள், உதவியாளர்கள் உதவியுடன்தான் அறிந்துகொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT