தினமணி கதிர்

ஒப்பரிய சித்திரிப்பு

அ.சா.குருசாமி

 தோழர் வில்ஹெம்ஸ் லீப்னெஹ்ட் (1826-1900) சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரது நண்பர். லீப்னெஹ்ட்டின் பெயர் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்தது என்று லெனினால் போற்றப்பட்டவர். படிக்கிற ஒவ்வொருவரிடமும் அரசியல் உணர்வை ஏற்படுத்துகிற "சிலந்தியும் ஈயும்' ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

""...பிறகு அந்தப் பயங்கரப் பிராணி முடிகள் மண்டிய தனது கொடுங்கரங்களை நீட்டி ஈயைப் பிடித்துத் தனது கொலைகார அரவணைப்பில் கெட்டியாய் அழுத்துகிறது. அடுத்து அது பலமிழந்து போய் நடுங்கும் ஈயின் உடலைக் கடிக்கிறது. ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் என்று தனது வெறிக்கும் பசிக்கும் ஏற்ப அத்தனை தரம் விழுந்து பிடுங்குகிறது. பாதி உயிர்போன நிலையில் அந்த ஈயை விட்டு விலகுகிறது. பிறகு திரும்பி வந்து மீண்டும் உறிஞ்சுகிறது. பாவம் அந்த ஈ எளிதில் உயிரை இழப்பதில்லை. குத்துயிரும் குலையுயிருமாய் நெடுநேரம் திணறுகிறது. இரையிடம் இம்மியளவு உயிர்த்துடிப்பு எஞ்சியிருக்கும் வரை அதை விடுவதில்லை. ஈயிடமிருந்து பருக எதுவுமே இல்லாமற் போன பிறகுதான் அதை விடுகிறது. முதலாளித்துவத்தின் கோரத்தை இதைவிட வலிமையாக யார் சித்திரிக்க முடியும்?''

(உதயசங்கர் எழுதிய

"முன்னொரு காலத்திலே' நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்

ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

SCROLL FOR NEXT