கருணைக் கடல் அலெக்சாண்டர்
பாரசீகத்தில் என் கண்ணால் கண்ட காட்சியை நான் மறக்கவே முடியாது. அன்பு நண்பர்களே பாரசீகத்தினை
பாரசீகத்தில் என் கண்ணால் கண்ட காட்சியை நான் மறக்கவே முடியாது. அன்பு நண்பர்களே பாரசீகத்தினை ஆண்ட மூன்றாம் டேரியஸ் மன்னன் தோற்றுப் போனான். அவனுடைய வயதான அன்னை வாழ வந்த மனைவி, வந்து பிறந்த மக்கள் அனைவரையும் அனாதையாகத் தவிக்கவிட்டுத் தன் உயிருக்கஞ்சிப் போர்க்களத்திலிருந்து தப்பியோடிவிட்டான்! ஆம்! அவன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டான். ஆனால் அவன் குடும்பம் என்ன பாடுபடும்? எப்படியெல்லாம் தத்தளிக்கும்?
அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அலெக்சாண்டரின் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள். அவர்களைக் கண்டான் அலெக்சாண்டர்! டேரியஸின் தாயைத் தன் தாய் என்று அறிவித்தான், கண்ணீர் மல்க! ஆனால் டேரியஸின் எழில்மிக்க ஏந்திழையான மனைவியைத் தன் ஆருயிர்ச் சகோதரி என்று பாசம் காட்டினான்! அவனது குழந்தைகளிடம் மிகுந்த பாசம் காட்டி நடந்து கொண்டான். அந்தக் காட்சி என் கண்களை விட்டே அகலவில்லை என்று ஒரு போர் வீரன் அலெக்சாண்டரின் அமரப் புகழ் பாடி நின்றான்.
('மாவீரன் அலெக்சாண்டர்' என்ற நூலில்...)