தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆயுர்வேதம் காட்டும் வாழ்க்கைமுறை!

தோற்றமும் மறைவும் இல்லாதது காலம். ஒரு ஜீவன் முற்பிறவியில் சேர்த்து வைத்த வினையையொட்டி

எஸ். சுவாமிநாதன்

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் எதை மதித்து நடக்க வேண்டும்? எப்படி நடந்து கொண்டால் வாழ்க்கை இனியதாக அமையும் என்று ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளதா?

எஸ்.வேணுகோபாலன், சென்னை.

தோற்றமும் மறைவும் இல்லாதது காலம். ஒரு ஜீவன் முற்பிறவியில் சேர்த்து வைத்த வினையையொட்டி காலமானது அவனுக்குப் பொதுக் காரணமாக இருக்கின்றது. காலத்தையொட்டி கதிரவன், நட்சத்திரங்கள், கிரகங்கள், விண் முதலான பெரும்பூதங்கள் மாறுதலைப் பெற்று பிறவியெடுக்கின்றன. உயிரினங்களுடைய பிறப்புகளுக்கும், பருவ காலங்களுக்கும், சுவை, வீரியம், தோஷம், உடல், உடல் பலம் இவற்றின் அழிவு வளர்ச்சி இவற்றுக்குக் காரணமாகவும் சாட்சியாகவும் காட்சி தருகின்றன.

அறநூல்கள், "நீ வாழ விரும்புகிறாயா? அப்படியானால் நேரத்தை வீணாக்காதே' என்று கூறுகின்றன. மனத்தின் ஸத்வ குண வளர்ச்சியினால், மனிதர்களுடைய புத்தி, மேதைமை வளர்ந்து அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை விரைவில் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. சிறிதும் காலம் தாழ்த்தாமல் கீழ் வருபவனவற்றை மனிதர்கள் தம் வாழ்நாளில் என்றென்றும் அனுசரிக்க வேண்டும்:

ஸத்யவாதிநம் - மெய்யே பேசுகிறவன்

அக்ரோதம் - சினமற்றவன்

நிவிருத்தம் மத்ய மைதுனாத் - கள் மற்ற லாகிரி வஸ்துவை விலக்கினவன், பிரும்மசர்யம் வழுவாதவன்

அஹிம்ஸகம் - அஹிம்சா விரதமுள்ளவன்

பிரசாந்தம் - பூர்ண சாந்தியுள்ளவன்

பிரியவாதிநம் - அன்புடன் பேசுபவன்

ஜபசெளசபரம் - ஜபத்திலும், அழுக்கை அகற்றுவதிலும் சதா ஈடுபடுபவன்

தீரம் - தைரியசாலி

தான நித்யம் - தினமும் தானம் செய்பவன்

காருண்யவேதிநம் - சகலப் பிராணிகளையும் கருணையுடன் பார்ப்பவன்

தபஸ்வினம் - தவம் புரிகிறவன்

தேவ - கோ - பிராம்ஹனாசார்ய - குரு - விருத்தார்ச்சநே - ரதம் - தெய்வம், பசுமாடு, வேதியர், வித்தை கற்பித்தவர், உபதேசித்தவர், முதிர்ந்தோர் இவர்களை முறைப்படி வழிபடுபவன்

ஆநிருதிசம்ஸயபரம் - எப்போதும் கள்ளம், கபடம், பொல்லாங்கற்றவன்

ஸமஜாகரமஸ்வப்னம் - பகல் ராத்திரிக்கு விதிப்படி விழிப்பும் தூக்கமும் உள்ளவன்

நித்யம் க்ஷீரகிருதாசினம் - என்றும் இருவேளையும் பால், நெய் சேர்த்தே உண்பவன்

தேச கால பிரமாணஜ்ஞம் - அந்தந்த காலம் தேசத்தின் இயல்பை அறிந்து தகுந்தபடி நடப்பவன்

யுக்திஜ்ஞம் - ஊகமுள்ளவன்

அநஹங்கிருதம் - கர்வம், அகந்தையில்லாதவன்

சஸ்தாசாரம் - நல்லொழுக்கமுடையவன்

அஸங்கீர்ணம் - துஷ்டர்களுடனும், போக்கிரிகளுடனும் சேராதவன்

அத்யாத்ம பிரவணேந்திரியம் - இந்திரியங்களை அடக்கி ஆத்ம விசார சீலன்

உபாஸிதாரம் விருத்தாநாம் ஆஸ்திகாநாம் ஜிதாத்மநாம் - முதியவர்கள், ஆஸ்திகர்கள், இந்திரியங்களையும் மனதையும் வென்று தன்னடக்கமுள்ளவர்களைப் பக்தியுடன் வழிபடுபவன்

தர்மஸாஸ்திரபரம் - தர்மசாஸ்திரப்படி அனுஷ்டிப்பவன்

வித்யாந்நரம்மேத்ய ரஸாயனம் - இப்படிப்பட்ட புருஷன் ஸத்வம் தரும் புத்திமேதைகளை வளர்க்கும் ரசாயனத்தை சேவிப்பவன்

மேற்குறிப்பிட்டவற்றை இவ்வருடத்தில் கடைப்பிடித்துக் காலத்தை மதித்து நடந்து இந்த வருடத்தையும் வாழ்க்கையையும் இனியதாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT