கலாேக்ஷத்ரா ரகப் பட்டுச் சேலைகள்
ஜரிகைக் கரைக்குப் பதிலாகப் பட்டு இழையைக் கொண்டு நெய்யப்பட்ட கலாேக்ஷத்திரா பாணி பட்டுச் சேலைகள்
ஜரிகைக் கரைக்குப் பதிலாகப் பட்டு இழையைக் கொண்டு நெய்யப்பட்ட கலாேக்ஷத்திரா பாணி பட்டுச் சேலைகள் ஜரிகை போட்ட பட்டுச் சேலைகளைவிடவும் கவர்ச்சிகரமான வரவேற்பைப் பெற்றது. இவற்றுக்கு ஜரிகை இல்லை. என்றாலும் பழமை மாறாத டிசைன்கள் கண்ணைக் கவரும் நிறங்கள் காரணமாக விற்பனை வளர்ந்தது. நீண்டகாலமாக இருந்து வந்த டிசைன்கள் மீண்டும் மீண்டும் வரவேற்கப்படுவதால் நவீன நாகரிகம் பளிச்சிட, நுண்கலை நுட்பத்துடன் அழகிய வண்ணங்களில் உற்பத்தியாகும் கலாேக்ஷத்திரா ரகப் பட்டுச் சேலைகள் உலகப் புகழ் பெற்றுள்ளன.
கலாúக்ஷத்திரா டிசைன்கள் உருவாகக் காரணமானவர் ருக்மிணிதேவி அருண்டேல். பழைய ஜமீன்தார்களின் வீடுகள் மற்றும் அரண்மனைகளிலிருந்து கலை நயமிக்க பட்டுப் புடவைகளை ஏலம் எடுத்துச் சேகரித்து ஓர் அருங்காட்சியகம் வைத்திருந்தார். இப்படிப் பழைய ரகங்களைப் பேணி காக்கப் பாடுபட்டார். இதற்கென்று தனியாகத் தறிகள் அமைத்து மற்ற மாநிலங்களிலிருந்து தொழில் திறம் மிக்க கைத்தறியாளர்களை வரவழைத்து, தனி ரகங்களைத் தந்து பட்டுத் தொழிலுக்குப் பெருமை சேர்த்தார்.
இவரைப் போலவே டி.வி.எஸ்.குடும்பத்தைச் சேர்ந்த பிரேமா சீனிவாசன், பிரபல நாட்டியமணி லக்ஷ்மி விசுவநாதன், சாராபாய் குடும்பத்தின் மிருணாளினி சாராபாய், செட்டிநாட்டு அரச குடும்பத்தின் மீனா முத்தையா போன்றவர்கள் இத்துறையில் கவனம் செலுத்தித் தங்களுக்குத் தோன்றும் டிசைன்களையும் கிடைக்கும் பழையனவற்றையும் மீண்டும் பிரபலமடையச் செய்து பட்டுத் தொழிலுக்குப் பணியாற்றி வருகின்றனர். இதனால் பல தொன்மையான டிசைன்கள் இன்றைய நாகரிக உலகுக்குக் கிடைத்து வருகின்றன.
Advertisement