ஆபூர்வமான சாதனையாளர்
பதினேழாவது வயதில் முதன்முதலாக நியூயார்க் சிட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றிபெற்ற செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து
பதினேழாவது வயதில் முதன்முதலாக நியூயார்க் சிட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றிபெற்ற செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து முப்பதாவது வயதிலும் விளையாடி வெற்றி பெறுவது விளையாட்டுத் துறையில் அபூர்வமான சாதனையாகும்.
இவருடன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றவர்களில் மார்டினா ஹிங்கிஸ், லிண்ட்úஸ டாவன் போர்ட், அமிலி மௌரஸ்மோ, ஜெஸ்டின் ஹெவின், சிம்லிஸ்டர் போன்றவர்கள் ஓய்வுபெற்ற போதிலும் இவர் தொடர்ந்து ஆடி வருவது வியப்பிற்குரியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆடிவந்த ஆன்டி ராடிக் கூட தன்னுடைய 30-ஆவது வயதில் ஓய்வுபெற்றபோது, செரினாவின் தொடர் வெற்றி என்னைப் பிரமிக்க வைக்கிறது என்றாராம். இவரது சகோதரி வீனஸ் செரினா, 2008-ஆம் ஆண்டோடு தொடர்ந்து விம்பிள்டன் போட்டியில் ஏழுமுறை முக்கியமான ஒற்றையர் பிரிவில் வெற்றிபெற்று ஓய்வுபெற்ற பின்னரும், செரினாவின் தொடர் வெற்றியைப் பார்த்து இவர்களது தந்தை ரிச்சர்ட் வில்லியம்úஸ ஆச்சரியப்பட்டாராம். சில ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரலில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, செரினா அவசர சிகிச்சை மேற்கொண்டபோது கூட தொடர்ந்து தன்னால் ஆட முடியுமென்ற மன உறுதி அவரிடம் இருந்தது.
மீண்டும் விளையாடத் தொடங்கியபோது, "முழுமையாக நான் குணமடைந்து விட்டதாகக் கருதவில்லை. அடுத்த நிமிடம் என்ன நடக்குமென்று தெரியாது. ஆனால், இந்த இடம்தான் எனக்கு ஏற்றதாகத் தோன்றுகிறது. பார்வையாளர்கள் கூட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பார்வையாளர்கள் அதிகரித்திருப்பது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது'' என்று கூறிய செரினா, அவரது சமகாலத்திய விளையாட்டு வீரர்களிலேயே மிகச்சிறந்த வீராங்கனையாகக் கருதப்பட்டார். உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்திருந்த செரினா, பதினைந்தாவது யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பதின்மூன்றாவது முறையாக ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றபோது கூறினாராம் ""ஐ வில் ஸர்வைவ்''!