முகப்பு
தினமணி கதிர்

தமிழ்ப் படைப்புகளுக்கு தாராளமான பரிசு!

தமிழ்ப் படைப்புகளுக்குப் பல அமைப்புகள் விருது வழங்கி வருகின்றன. ஆனால் பேராசிரியர் வி.மாசிலாமணி இந்த ஆண்டு முதல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:56 AM
பகிர்:

தமிழ்ப் படைப்புகளுக்குப் பல அமைப்புகள் விருது வழங்கி வருகின்றன. ஆனால் பேராசிரியர் வி.மாசிலாமணி இந்த ஆண்டு முதல் "மாசிலா - விஜயா பரிசை' தென்றல் அமைப்பு மூலம் ஆண்டுதோறும் வழங்கவுள்ளார். தமிழ் இலக்கியம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக சேவை ஆகிய பிரிவுகளில் தலா ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படவுள்ளது.

மாசிலாமணி யார்?

பேராசிரியர் மாசிலாமணி, திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி கிராமத்தில் பிறந்து தமிழ்நாட்டில் கல்வி கற்றவர். விஞ்ஞானி. லேசர் துறையில் வித்தகர்.

நவம்பர் 3, 2008 அன்று, புற்று நோய் ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் ஆராய்ச்சி மேற்கொண்டதற்காக, சவூதி இளவரசர் நயீப், பேராசிரியர் மாசிலாமணிக்கும் அவருக்குத் துணையாக இருந்த விஞ்ஞானிகளுக்கும் இந்திய மதிப்பில் ஆறரை லட்சம் ரூபாய் பரிசு அளித்து கௌரவித்தார். இது தமிழக விஞ்ஞானி ஒருவருக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என்றும் இளவரசர் பாராட்டியிருக்கிறார்.

மாசிலாமணியின் சாதனைதான் என்ன?

ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, அதிலுள்ள உயிர்மூலக் கூறுகளை லேசர் ஒளி மூலம் பகுத்தெடுத்தார். அதேபோல அதிகாலையில், முதல் சிறுநீர்த் துளியின் மூலக் கூறுகளையும் பகுத்தெடுத்தார். இதைக் கொண்டு "மாசிலா புற்று நோய் ஆய்வு' என்ற புதிய உத்தியைக் கண்டுபிடித்து, ஒருவருக்குப் புற்று நோய் இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறிய வகை செய்தார். இவரது கண்டுபிடிப்பை உலகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது.

மாசிலாமணி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியிருக்கிறார். தமிழ்ப் படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்குவது இது முதல் வருடம். இனி தொடர்ந்து இந்தப் பரிசுகளை வழங்கத் திட்டமிட்டிருக்கிறார்.

யார் நினைவாக இந்தப் பரிசுகளைக் கொடுக்கிறீர்கள்?

யார் நினைவாகவும் அல்ல. என் சொந்த விருப்பத்துக்காக இந்தப் பரிசுகளை வழங்குகிறேன்.

இதற்கு நிதி எங்கிருந்து வருகிறது?

நான் ஒரு தமிழன். தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி. அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பல்கலைக்கழகங்களில் பணியாற்றிவிட்டு, தற்போது சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறேன். நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். தமிழ் மீது உள்ள ஆர்வமும், விஞ்ஞானத்தில் உள்ள ஆர்வமுமே என்னை இந்தப் பரிசுகள் வழங்கத் தூண்டின. எனக்குக் கிட்டத்தட்ட பத்து லட்ச ரூபாய் அளவுக்கு, நான் பணிபுரிந்த நாடுகளிலிருந்து பரிசுகள் கிடைத்திருக்கின்றன. அந்தத் தொகையைத்தான் இப்போது நான் இந்தப் போட்டிகளில் பரிசு பெறும் படைப்பாளிகளுக்காகத் தர முன் வந்திருக்கிறேன்.

(விவரங்களுக்கு:  900 321 5381)

முழு கட்டுரையைப் படிக்க →