முகப்பு
தினமணி கதிர்

என்னுடைய  கார்ட்டூன்கள் அரசியல்வாதிகளுக்காக அல்ல!

சிறுவயது முதலே ஓவியத்தில் நாட்டம் கொண்டிருந்த ஆர்.கே.லட்சுமண் ( 1921 - 2015) முறைப்படி ஓவியம் கற்க

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

சிறுவயது முதலே ஓவியத்தில் நாட்டம் கொண்டிருந்த ஆர்.கே.லட்சுமண் ( 1921 - 2015) முறைப்படி ஓவியம் கற்க மும்பையில் உள்ள பிரபல "ஜே.ஜே. ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் ஓவியக் கல்லூரிக்கு செய்த விண்ணப்பம்  நிராகரிக்கப்பட்டது. பின்னர் சுயமாக  கார்ட்டூன்களை வரையத் தொடங்கி, "ஃப்ரீ

பிரஸ் ஜர்னல்' பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக சேர்ந்தார். இவரது வருகையால் அங்கு ஏற்கெனவே கார்ட்டூனிஸ்டாக இருந்தவர் பால்தாக்ரே ( பின்னாளில் சிவசேனா தலைவரானார்). பின்னர் 1947-ஆம் ஆண்டில் " "டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக சேர்ந்து 63 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியது பத்திரிகைத் துறையில் எந்த கார்ட்டூனிஸ்டும் நிகழ்த்தாத சாதனையாகும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய சகோதரர் ஆர்.கே. நாராயணின் படைப்புகளின் கதாபாத்திரங்களுக்கு  தன்னுடைய ஓவியங்கள் மூலம் உயிரூட்டி வந்த லட்சுமணுக்கு அரசியல் பிடிக்கும்; அவரது சகோதரர் நாராயணுக்கு அரசியல் பிடிக்காது. இருவரும் வெவ்வேறு துருவங்களாக இருந்தனர். லட்சுமணுக்கு அரசியல்வாதிகளைத் தாக்குவது மிகளம் பிடிக்கும். இதுபற்றி அவர் ஒருமுறை கூறுகையில், ""இந்த அரசியல்வாதிகளை பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. அவர்களது கோபம் என்னை எந்த வகையிலும் பாதிக்காது. நான் வரையும் ஓவியங்கள் மக்களுக்காகத்தான்.  அரசியல்வாதிகளுக்காக அல்ல'' என்று தெரிவித்த லட்சுமண், ஜனவரி 26- ஆம் தேதியன்று தன்னுடைய 94 வயதில் காலமானார். அவர் எழுதிய "தி டனல் ஆப் டைம்' என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

வாசகர்களுக்கு நகைச்சுவை கலந்த ஒரு கேரக்டரை அறிமுகப்படுத்தி அவர் மூலம் நாட்டு நடப்புகளை தெளிளபடுத்த வேண்டுமென்பதற்காக நான் உருவாக்கிப் போட்ட சட்டையை அணிவித்து சாதாரண மனிதனைப்போல நாட்டு நடப்புகளை பார்ப்பது மட்டும்தான் வேலை. வாயை திறந்து ஒருவார்த்தை பேசமாட்டார்.

வறுமையில் உள்ள மக்களை சந்திப்பது, வெளிநாட்டிலிருந்து வரும் தலைவர்களை பார்ப்பது, தேவையில்லாமல் தென்துருவத்திற்கு பயணம் மேற்கொண்ட ஓர்  அரசியல்வாதி அங்கு பெங்குவின்களுடன் பேசுவது போன்ற  அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளை பார்த்து நாட்டு நடப்புகளை விமர்சிப்பது போல் அமைந்த " பொதுஜனம்' பாத்திரம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வாசகர்களும் தங்கள் பங்குக்கு அரசியல்வாதிகளின் அடாவடித்தனம், நகராட்சிகளில் லஞ்சம், தபால் தாமதம், டெலிபோன் குளறுபடிகள், கரண்ட்பில் உயர்ள, சுற்றிலும் நடக்கும் விதிமீறல்களைக் குறிப்பிட்டு கார்ட்டூன்களாக யோசனை கூறத் தொடங்கினர்.

புதுதில்லி உள்துறை அமைச்சகத்திலிருந்து வருவதாக கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபரொருவர் என்னை சந்தித்த போது, எனக்கு பிரதமர் "பத்மபூஷண்' விருது வழங்க  பரிந்துரை செய்திருப்பதாக கூறினார். இத்தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் பிரதமர் இந்திரா காந்தியை நான் கார்ட்டூன்களில் விமர்சித்து வந்ததோடு அவரது செயல்பாடுகளையும் கேலி செய்துவந்தேன். இதற்காகவே இந்த விருதுக்கு நான் தகுதியானவன் என்று நினைத்திருப்பாரோ என்று கருதினேன்.

இருந்தாலும் இந்த விருதை ஏற்பதற்கு சற்று அவகாசம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். கடைசியில் அந்த விருதை நான் ஏற்க ஒப்புக் கொண்டேன். அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தளடன்  நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் எனக்கு ஏராளமான வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்தன.

இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் எனக்கொரு கடிதம்  அனுப்பியிருந்தது. விருது வழங்கும் தினத்தன்று எப்படி விழாவில் பங்கேற்க வேண்டும். எப்படி விருது பெற வேண்டும் என்று முன்னதாகவே ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சிக்கு வரும்படி அதில் குறிப்பிட்டிருந்தார்கள். விழாளக்கு மனைவியையும் அழைத்து வருவதாக இருந்தால் வந்து போகும், தங்கும் செலவை அரசு ஏற்கும். அப்படி மனைவியை அழைத்து வரும்போது அதிக ஆடம்பரமின்றி புடவை அணிந்து வரவேண்டுமென்றும், புடவையின் பார்டர் அகலம் இரண்டு அங்குலத்திற்குமேல் இருக்கக் கூடாதென்றும் குறிப்பிட்டிருந்தார்கள். எதிர்பாராத விதமாக ஒத்திகைக்குப் போக முடியவில்லை; விழாவிலும் பங்கேற்கவில்லை. அன்றைய தினத்தில் ஏற்கெனவே நான் ஜெர்மனியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நான் ஒப்புக் கொண்டிருந்ததால் புதுதில்லி போக முடியவில்லை.

பத்து மாதங்கள் கழித்து "பத்மபூஷண்' விருதுக்கான ஒரு பெரிய மெடலையும், ஒரு சிறிய மெடலையும் தபால் மூலம் எனக்கு அனுப்பியிருந்தார்கள். கூடவே உள்துறை அமைச்சக செயலாளர் கடிதமொன்றையும் அனுப்பியிருந்தார். அதில் பெரிய மெடலை அதிகாரப் பூர்வமான விழாக்களிலும், சிறிய மெடலை சாதாரண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும்போது அணிந்து கொள்ளலாம். பார்ப்பவர் கண்களுக்கு பளிச்சென்று தெரியும்படி அணிந்து கொள்ள வேண்டும்மென்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிபந்தனைகளுக்கு என்ன அர்த்தம் என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை.

புகழ்பெற்ற கவிஞர் டி.எஸ். எலியட்டை சந்தித்து அவரது உருவத்தை ஓவியமாக வரையச் சென்றிருந்தேன். அவரது உருவத்தை முதலில் " ரஃப் ஸ்கெட்சாக பென்சிலில் வரையத் தொடங்கினேன். பெரும்பாலும் அவர் மளனமாக உட்கார்ந்திருப்பதைப்  பார்த்து பேச்சு கொடுக்க நினைத்தேன். லண்டனில் நான் சந்தித்த ஒரு கவிஞரைப் பற்றி அவரிடம் கூறினேன். அந்தக் கவிஞர் தனக்கு எலியட்டைத் தெரியும் என்றும், தற்போது அச்சாகிவரும் அவரது கவிதை தொகுப்புக்கு எல்லியட்தான் முகளரை எழுதி கொடுத்திருப்பதாகளம் அவர் கூறியதை இவரிடம் தெரிவித்தேன். ""இப்படியொரு கவிஞர் பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. இதுவரை நான் யாருக்கும் முகளரை எழுதி தரளம் இல்லை'' என்று அவர் சொல்லிவிட்டு போஸ் கொடுக்க நிமிர்ந்து உட்கார்ந்தார். அதன் பிறகு நான் ஏதும் பேசவில்லை. ஓவியத்தை முடித்துவிட்டு அவரிடம் கையெழுத்து போட்டுத் தரும்படி கேட்டேன். அவர் அசையாமல் அப்படியே உறங்கிக் கொண்டிருந்தார். சற்று உரத்த குரலில் அவரை எழுப்பினேன். உறக்கத்திலிருந்து விழித்த அவர் என்னிடம் மன்னிப்பு கேட்ட பின்பு, ஓவியத்தைப் பார்த்து பாராட்டியதோடு கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

மொரார்ஜி தேசாய், மகாராஷ்டிர முதல்வராக பதவி ஏற்ற பின்னர் மாநிலத்தில் மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார். குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது, பாவம் என்ற கருத்தில் இந்த சட்டத்தை கொண்டு வந்தார். கூடவே  குறுக்கெழுத்துப் போட்டி, குதிரை பந்தயங்களுக்கும் தடைவிதித்தார். குடிப்பது  குறித்து அவர் கூறுகையில், தனக்கு தண்ணீர் தாகம் எடுத்தால் கூட சாதாரண தண்ணீரை குடிப்பதில்லை ஒருவேளை குடிக்க வேண்டும் என்று தோன்றினால் தன்னுடைய சிறுநீரையே குடிக்க தயங்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார். இது குறித்து நான் வரைந்த கார்ட்டூன் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, தங்கள் கொள்கையை எதிர்த்து அரசையும், அமைச்சர்களையும்,  அரசியல்வாதிகளையும் கேலிசெய்து கார்ட்டூன்கள் வெளியிடுவதைத் தடைசெய்ய வேண்டுமென்று தீர்மானமொன்றை நிறைவேற்றினார். இந்திய அரசியல் சட்டப்படி பேச்சுரிமை, எழுத்துரிமை வழங்கப்பட்டிருந்தாலும் அதை தடை செய்யளம் முடியுமென்று குறிப்பிட்டிருந்தார்.

பெரும்பாலும் நான் அரசியல்வாதிகளை நேரில்  சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன். என்னுடைய தொழில் முறையில் ஓர் அரசியல்வாதி என்னுடைய கார்ட்டூனை பாராட்டினால் அதன்  பின்னால் ஓர் அர்த்தம் இருப்பதாகவே கருதினேன். எதிர்கட்சியில் இருப்பவரை பற்றி கார்ட்டூனில் குறிப்பிட்டிருந்தால் என்னை ஒரு ஜீனியஸாகப் பாராட்டுவார்கள். இதுபோன்ற சமயங்களில் அரசியல்வாதிகள் என்னைச் சந்தித்து பாராட்டி கைகுலுக்கினாலும் மறைமுகமாக இதுபோன்ற கார்ட்டூன்களை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று எச்சரிப்பதாகவே நான் கருதுவதுண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.