முகப்பு
தினமணி கதிர்

இயற்கை நகரம்!

நமது முன்னோர்கள் சுற்றுச்சூழலுக்குக் கேடு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

Updated On : 19 ஜூலை, 2015 at 5:11 PM
பகிர்:

நமது முன்னோர்கள் சுற்றுச்சூழலுக்குக் கேடு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

மின்சாரம் இல்லை. இயந்திரங்கள் இல்லை. புகை கக்கும் வாகனங்கள் இல்லை. அதனால் சுற்றுச் சூழலுக்குக் கேடு இல்லை.

இன்று நம்மால் அந்த வாழ்க்கையை வாழ முடியுமா?

Advertisement

நவீன வசதிகளையும் அனுபவித்துக் கொண்டே, சுற்றுச் சூழலுக்குக் கேடு இல்லாத வாழ்க்கையை வாழ முடியுமா?

""முடியும் '' என்கிறார் கட்டிடவியலாளரான ரேய்மாண்ட் டி ஹுல்லு. டச்சு நாட்டைச் சேர்ந்தவரான அவர் திட்டமிட்டிருக்கிற சுற்றுச்சுழல் பாதிப்பில்லாத நகரத்தில் அது சாத்தியம் என்கிறார் அவர்.

அவர் திட்டமிட்டிருக்கிற நகரத்தில் வீடுகள்

முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்யப்பட்ட மரத்தினால் கட்டப்பட்டிருக்குமாம். நான்கு அடுக்கு மாடிகள் கூட அதில் உண்டு. 1 ஹெக்டேர் நிலத்தில் 100 வீடுகள் மட்டுமே கட்டப்படுமாம். மீதி இடமெல்லாம் பூங்காக்களுக்காக.

அங்கே தார்ச்சாலைகள், சிமெண்ட் சாலைகள் இல்லை.

சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம்.

தண்ணீரைக் கொதிக்க வைக்க, வெளிச்சத்துக்கு எல்லாம் சோலார் பேனல் மின்சாரம்தான்.

வீடுகளின் வெளிப்புறம் இலைதழைகளால் சூழப்பட்டிருக்கும். அதனால் வீட்டினுள் வெக்கை இல்லை. மின்விசிறி, ஏஸி தேவையில்லை.

""இயற்கைக்கு முரணில்லாத - இயற்கையைப் பாதுகாக்கிற

நகரம்தான் நான் திட்டமிட்டிருக்கிற நகரம்'' என்கிறார் ரேய்மாண்ட் டி ஹுல்லு. அதற்காகவே அவர் ஞஅந1ந என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்.

அவர் உருவாக்கத் திட்டமிட்டுள்ள நகரத்தின் மாதிரிகள் தாம் இவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.