முகப்பு
தினமணி கதிர்

விழிப்புணர்வு இளைஞர்!

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். பொறியியல் பட்டதாரி. இளைஞர்கள் மது போதையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக சேலத்தில் இருந்து சென்னை வரை 24 மணிநேர சைக்கிள் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:51 AM
பகிர்:

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். பொறியியல் பட்டதாரி. இளைஞர்கள் மது போதையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக சேலத்தில் இருந்து சென்னை வரை 24 மணிநேர சைக்கிள் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 18.06.2015 அன்று சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இருந்து இந்தப் பிரசாரப் பயணத்தைத் தொடங்கினார். உடையாப்பட்டி பகுதியில் உள்ள சுவாமி மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களுடன் மதுவால் ஏற்படும் தீமை குறித்து கலந்துரையாடல், வாழப்பாடி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தியது, ஆத்தூரில் லையன்ஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மதுவைத் தவிர்க்க கோரி பேசியது, மேலும் அங்கு ஜெயம்பாரதி மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தது, மேலும் சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தது என நிகழ்ந்த இவருடைய விழிப்புணர்வுப் பிரசாரம், 19.06.2015 காலை 11 மணியளவில் சென்னையில் நிறைவடைந்தது. இவர் தனது பிரசாரத்தின்போது மதுஒழிப்பு பிரசாரம் மட்டுமின்றி, சாலை விதிகளை மதிக்க வேண்டும், விபத்துகளை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இந்த பிரசாரத்தின் ஒருபகுதியாகக் கொண்டுள்ளார்.

சாலையில் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் புழுதியில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பொதுமக்களுக்கு 10,000 சுவாச கவசம் வழங்கியது, சாலையில் எச்சில் துப்புதல் கூடாது, அதனால் தொற்றுவியாதிகள் பரவுவதால் அதனைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது, ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காகவும், உணவுக்காகவும் உதவியது, மரங்களை வளர்க்கும் ஆர்வத்தை தூண்டுவதற்காக பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியது என இவருடைய பல்வேறு சேவைகள் தொடர்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.