முகப்பு
தினமணி கதிர்

மின்சாரப் பொருட்களைக் கையாளும்போது...

மின் அடுப்பில் பால் கொதித்து வழிந்துவிட்டால் சட்டென துடைக்கக் கூடாது. உலோகக் கரண்டியால் அடுப்பில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:57 AM
பகிர்:

1.  மின் அடுப்பில் பால் கொதித்து வழிந்துவிட்டால் சட்டென துடைக்கக் கூடாது. உலோகக் கரண்டியால் அடுப்பில் உள்ளதைக் கிண்டுவதும் கூடாது. ஷாக் அடிக்கும் அபாயம் உண்டு.

2.  அதிக மின்னல், மழை, இடி இருந்தால் "செட்ஆப் பாக்ஸ்' தொடர்பை டி.வி.யிலிருந்து விடுவிக்கவும். அபூர்வமாய் சில நேரங்களில் மின்னல் உண்டாக்கும். உயர் அழுத்த மின்சாரமோ அல்லது இடியோ தாக்கி டி.வி. பாதிக்கப்படக் கூடும்.

3.  குளிர் சாதன ஃபில்டரை இரு வாரங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்தால் அதிக அளவு மின்சாரம் செலவாவதை மிச்சப்படுத்தலாம்.

4.  தொலைக்காட்சி, குளிர் சாதனங்கள், மின் விளக்கு போன்ற சாதனங்களை அணைத்தவுடனேயே மனம் மாறி மீண்டும் போடாதீர்கள். ஃப்ரிட்ஜில் கம்ப்ரசரும், டி.வி.யில் பிக்சர் டியூபும்,டியூப் லைட்டில் பாலஸ்டும் இதனால் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதாகிவிடும்.

5.  குளிர் சாதனப் பெட்டியைச் சமையல் அறையில் வைக்கக் கூடாது. எரிவாயு கசிந்தால் வெளியேறும் வாயுவுடன் சேர்ந்து வேதிவினை புரிந்து நெருப்புப் பொறிகள் கிளம்பும். இது ஆபத்தை வரவழைக்கும். அதுபோல் ஃப்ரீஸரில் ஐஸ் சேர்ந்தால் அதை வெளியேற்ற டீஃப்ராஸ்ட் பட்டனை உபயோகிப்பதே சரியான வழி. டீஃப்ராஸ்ட் பட்டன் வேலை செய்யவில்லை என்றால், அதை சர்வீஸ் செய்ய வேண்டுமே தவிர, குச்சி, கரண்டி போன்றவற்றை வைத்து ஃப்ரீஸரில் குத்தினால் அதற்குள் செல்லும் கனெக்ஷன் பைப்புகள் வெடித்து ஆபத்தை விளைவிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.