முகப்பு
தினமணி கதிர்

கண்ணாடிப் பொருட்கள் பளபளக்க!

கண்ணாடியிஸ் உள்ள கறைகளைப் போக்க ஈரமான துணியைக் கொண்டு துடைப்பது நம் வழக்கம். இப்படித் துடைத்த பிறகும் கறைகள் கண்ணுக்குத் தெரியும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:29 AM
பகிர்:

கண்ணாடியிஸ் உள்ள கறைகளைப் போக்க ஈரமான துணியைக் கொண்டு துடைப்பது நம் வழக்கம். இப்படித் துடைத்த பிறகும் கறைகள் கண்ணுக்குத் தெரியும். ஈரமான துணிக்குப் பதிலாக செய்தித்தாள்களை பயன்படுத்திப் பாருங்கள். கண்ணாடியில் உள்ள ஈரம் முற்றிலும் உறிஞ்சப்படும். அதன் பிறகு காய்ந்த துணியை வைத்துத் துடைத்தால் மற்ற கறைகளும் அகலும். கண்ணாடியும் பளிச்சென்று ஆகிவிடும்.

ஜன்னல் கதவின் கண்ணாடிகள், அலமாரிக் கண்ணாடிகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள் மங்கலாக இருந்தால் சுண்ணாம்பை நீர்விட்டு நன்றாகக் குழைத்துத் தடவி சிறிது நேரமானாதும், தூய்மையான வெள்ளைத் துணியால் நன்றாகத் துடைத்தால் பளிச்சென்று ஆகிவிடும்.

ஜன்னல் கண்ணாடி, புகைப்படம் உள்ள கண்ணாடி ப்ரேம், கண்ணாடி போடப்பட்ட படங்கள் ஆகியவற்றைச் சுத்தம் செய்ய சாதாரணத் துணியை பயன்படுத்துவதைவிட பனியன் துணி போன்ற மென்மையான துணியே ஏற்றதாகும். இதனால் கண்ணாடி சுத்தமாவதோடு கீறல் விழாமலும் இருக்கும்.

கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசினால் கொஞ்சம் கடுகைப் போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். வாடை போய்விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.