தினமணி கதிர்

தண்டனை தந்தவருக்குப் பதவி உயர்வா?

சென்னை உயர்நீதி மன்றத்தில், நீதிபதி பதவி ஒன்றுக்கு ஒருவர் நியமிக்கப் பட வேண்டும்.

சி. ரகுபதி

சென்னை உயர்நீதி மன்றத்தில், நீதிபதி பதவி ஒன்றுக்கு ஒருவர் நியமிக்கப் பட வேண்டும். தகுதி மற்றும் சீனியாரிட்டியின்படி. அப்போது சாதாரண நீதிபதியாக இருந்த சமயம் எனக்கு அந்தப் பதவியை அளிக்க சிபாரிசு செய்தார் முதல்வர் அண்ணா.

உடனே தி.மு.க.வில் இருந்த முக்கிய தலைவர்களில் சிலர் அண்ணாவிடம் சென்று, " இந்த நீதிபதி சோமசுந்தரம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது உங்களுக்கும் எங்களுக்கும் ஜெயில் தண்டனை அளித்தவர். இவரை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சிபாரிசு செய்யக் கூடாது' என்றனர்.

அதற்கு அண்ணா சொன்னார்: " சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதைத் தான் செய்தார் சோமசுந்தரம், நீதிபதியாக இருப்பவருக்கு தயவு தாட்சண்யம் என்பதே இருக்கக் கூடாது. அப்படி தயவு தாட்சண்யம் பார்க்காதவருக்குத்தான் உயர்நீதிமன்ற நீதிபதி பதவி தரப்பட வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தரும், தமிழக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி.எஸ். சோமசுந்தரம் கூறியதிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT