அஞ்சு ரூபாய் வள்ளி!
"வள்ளி திருமணம்' நாடகத்தில் டி.கே. சண்முகத்தின் அண்ணன் டி.கே. முத்துசாமி வள்ளி வேடம் தாங்கினார்.
"வள்ளி திருமணம்' நாடகத்தில் டி.கே. சண்முகத்தின் அண்ணன் டி.கே. முத்துசாமி வள்ளி வேடம் தாங்கினார்.
ஒரு நாள் உடல் நலமில்லாததால் அவருக்குப் பதில் தம்பி சண்முகத்தை வள்ளி வேடத்தில் நடிக்கும்படி முதலாளி கேட்டுக் கொண்டு காதில் ஏதோ ரகசியமாக சொன்னார்.
சண்முகமும் வள்ளி வேடத்தில் பிரமாதமாக நடித்தார். ஊக்கத் தொகையாக முதலாளி அஞ்சு ரூபாய் கொடுத்தார்.
Advertisement
அதுமுதல் உடன் நடித்தவர்கள் அவரை
"அஞ்சு ரூபாய் வள்ளி' என்று அழைத்தனர்.
"காலத்தை வென்ற கலைஞர்கள்' என்னும் நூலில் இருந்து.