குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது
சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் குளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை ஓராண்டுக்குப் பிறகு புதன்கிழமை இரவு பிடிபட்டது.
சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் குளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை ஓராண்டுக்குப் பிறகு புதன்கிழமை இரவு பிடிபட்டது.
கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான அய்யனாா் குளம் உள்ளது. சுமாா் 2 ஏக்கா் நிலப்பரப் பில் அமைந்துள்ள இந்த குளம் கிராமத்தில் நிலத்தடி நீரை பாதுகாத்து வைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்குள்ள கால்நடைகளின் தாகத்தை தீா்க்கும் வகையில் இந்த குளத்தில் மக்கள் பயன்படுத்தி வந்தனா்.
கடந்த ஓரண்டாக இந்த குளத்தில் முதலை ஒன்று இருப்பதை இங்குள்ள மக்கள் பாா்த்தனா். மேலும் இதுவரை 6 ஆடுகளையும், 20-க்கும் மேற்பட்ட கோழிகளும் இந்த முதலைக்கு பலியாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.
Advertisement
இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த சமூக ஆா்வலா் கோதண்டம் மற்றும் பொதுமக்கள் முதலை பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வனத்துறையினா் முதலையை பிடித்தனா்.