தினமணி கதிர்

மைக்ரோ கதை

தினமணி

ஓர் ஊரில் ரவி என்ற இளைஞன் இருந்தான். அவனை எப்படி எரிச்சலூட்டினாலும் கோபமேபடமாட்டான். அவனைப் பார்க்க வந்த முரளி, "எனக்கு எதுக்கெடுத்தாலும் கோபம் வந்துடுது. கோபத்தை அடக்கவே முடியவில்லை. நீ எப்படி கோபப்படாமல் இருக்குற?'' என்று கேட்டான்.
அதற்கு ரவி, " நான் சின்னப் பையனா இருக்குறப்ப அடிக்கடி கோபப்படுவேன். அப்ப எங்க அம்மா சொன்ன அறிவுரை ஒண்ணுதான் என்னைக் கோபப்படாமல் தடுத்தது'' என்றான். 
"அப்படி என்ன சொன்னாங்க உங்க அம்மா?'' என்று ஆவலுடன் கேட்டான் முரளி.
ரவி சொன்னான்: "யாராவது உன்னைக் கோபப்படுத்தினா நீ அவங்க கிட்ட தோற்றதா அர்த்தம். அவங்க உன்னை எப்படி கோபமூட்டினாலும் நீ கோபப்படலைன்னா நீ ஜெயித்ததா அர்த்தம்'' ன்னு எங்க அம்மா சொன்னாங்க. நான் இப்ப எல்லாத்தையும் ஜெயித்துக் கிட்டிருக்கேன்.
அ.ராஜா ரஹ்மான், கம்பம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT