தினமணி கதிர்

சிரி... சிரி... சிரி... சிரி... 

DIN

• "உங்க மனைவிக்கு ஏன் வாயில தையல் போட்டாங்க?''
"வாய் கிழிய பேசினாங்க. அதான்''
என்.சாமிநாதன், பட்டீஸ்வரம்.

• "வாயைத் திறக்க முடியாமல் அவஸ்தைப்பட்ட உங்க மாமாவை டாக்டர் எப்படி குணப்படுத்தினார்?''
"இந்த வியாதியைக் குணப்படுத்த ரூ.50 ஆயிரம் ஆகும்னு டாக்டர் சொன்னார். தானாகவே வாய் திறந்துகிடுச்சி''
வி.ரேவதி, தஞ்சை.

• "தலைவர் ஏன் டேபிள்ல காய்கறிகளை குவிச்சு வச்சுக்கிட்டு அங்கேயும் இங்கேயும் நகர்த்துறாரு''
"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
சி.ரகுபதி, போளூர்.

• "என்னங்க மாப்பிள்ளை உடம்பு முழுக்க ஒரே தழும்பா இருக்கு''
"நான் அப்பவே சொல்லலை. மாப்பிள்ளை வாழ்க்கையில ரொம்ப அடிபட்டவர்ன்னு''
கே.முத்தூஸ், தொண்டி.

• "அந்த நடிகை ஏன் குளியல் அறை காட்சியில் நடிக்கமாட்டேன்னு சொல்றாங்க?''
"அவங்க இப்ப முழுகாம இருக்காங்களாம்''

• "இந்த குக்கரை நாங்க எங்க பாட்டி காலத்துல இருந்து யூஸ் பண்றோம்''
"அப்ப நல்ல ஆவி வந்த குக்கர்ன்னு சொல்லு''

• "எங்க ஏரியால பயங்கர தண்ணி கஷ்டம்''
"நிஜமாவா?''
"ஆமா... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது''

• "நீங்க ஏன் பொம்பளை மாதிரி டிவி சீரியலைப் பார்த்து அழறீங்க?''
"இது டிவி சீரியல் இல்லீங்க. என் கல்யாண கேசட்''
வி.சாரதி டேச்சு, சென்னை -5.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT