தினமணி கதிர்

திருப்பூர் சிறுமிக்கு விருது!

சமீபத்தில் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் நடந்து முடிந்த  குறும்பட திரைப்படவிழாவில் திருப்பூரைச் சேர்ந்த  சிறுமி மகேஸ்வேதாவிற்கு  "சிறந்த குழந்தை நட்சத்திர' விருது கிடைத்துள்ளது.

பனுஜா

சமீபத்தில் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் நடந்து முடிந்த  குறும்பட திரைப்படவிழாவில் திருப்பூரைச் சேர்ந்த  சிறுமி மகேஸ்வேதாவிற்கு  "சிறந்த குழந்தை நட்சத்திர' விருது கிடைத்துள்ளது.  மகேஸ்வேதா  திருப்பூர் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்தவர். நான்காம் வகுப்பு மாணவி. மகேஸ்வேதா நடித்திருக்கும் குறும்படம் மலையாளை மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

படத்தைத்  தயாரித்திருப்பவர் மகேஸ்வேதாவின் தந்தை கிருஷ்ணன். திருப்பூரில் சார்ட்டட் அக்கெளன்டன்ட்டாக தொழில் செய்து வருகிறார். குறும்படம் தயாரிக்க ஒன்றரை  லட்சம் ரூபாய் செலவானதாம். குறும்படம் என்பதற்காக  சிறிய  காமிராவில் படம் பிடிக்காமல், தொழில்முறைக் காமிரா கொண்டு படம் எடுக்கப்பட்டதாம்.  அறுபது நாடுகளிலிருந்து  தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் போட்டியில் பரிசீலிக்கப்பட்டன.

தனது வேலையில் பிசியாக இருக்கும் தந்தை, வீட்டு வேலைகளில் ஈடுபட்டு, தோழிகளிடம்  பேசி அலைபேசியில் நேரம் செலவழிக்கும் அம்மா... இவர்களுக்கு மகளிடம் பேச நேரமில்லை. மகள் சொல்வதைக் கேட்க நேரமில்லை. அப்பாவுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து  மனைவியிடம் சொல்ல வந்தால் "நான் என்ன செய்ய'  என்று விலகும் மனைவி... மனைவிக்கு  ஏற்படும் பிரச்னையை காதில் வாங்காத கணவன்...

பெற்றோரின்  அன்பு, அரவணைப்பு, அருகாமைக்காக  ஏங்கும்  சிறுமி, படிப்பு... பாட்டு... நடனம்  என்று தனக்கென்று  ஓர் உலகத்தை   ஏற்படுத்திக் கொண்டு புழுங்கி  நாட்களைக் கடத்துகிறாள். ... தனது  பிரச்னைகளை யாரிடம் சொல்வது என்று  மூன்று பேரும்    தனக்குத்தானே  புலம்புகிறார்கள்.  இதைச் சொல்வதுதான் "யாரிடம் பறையும் ?'    என்ற குறும்படம்.  சமகாலப் பிரச்னையை சொல்லும்  படம். 

""எனக்கு திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும்... நடிக்கவும் விருப்பம்...  எனக்குப் பிடித்த  நடிகை  கீர்த்தி சுரேஷ்... படத்தில்தான்  அப்பா, அம்மா  நேரமில்லாமல் பிசியாக  இருக்கிறார்கள்.  நான்  அவர்களிடம் பேச  பழக ஏங்குகிறேன். நிஜ வாழ்க்கையில்   எனது பெற்றோர்  என்னிடம்  தேவைப்பட்ட நேரத்தைச் செலவழிக்கிறார்கள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்று சொல்கிறார் படத்தில் சிறுமியாக நடித்திருக்கும் மகேஸ்வேதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT