தினமணி கதிர்

மைக்ரோ கதை

DIN

குமரன் மிகவும் கஞ்சன். தான் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருந்த பணத்தைத் தான் இறந்த பின்பு கூட பிறர் அனுபவிக்க அவன் விரும்பவில்லை. நோய்வாய்ப்பட்டிருந்த அவன், இறப்பதற்கு முன்பு மனைவியிடம், தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் தனது சவப்பெட்டியில் வைத்து தன்னோடு அடக்கம் செய்ய வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டான்.
 சில நாட்களில் அவன் இறந்துபோனான். உறவினர்கள் எல்லாருக்கும் இது தெரியும் என்பதால், அடக்கம் செய்யும் நாளன்று சவப்பெட்டியில் வைக்கப் போகும் பணத்தைக் காண எல்லாரும் ஆவலாக இருந்தார்கள்.
 ஆனால் குமரனின் மனைவி பணத்தை வைக்கவில்லை. ஒரு கவரை மட்டும் உள்ளே வைத்தாள்.
 எல்லாரும் பணத்தை ஏன் சவப்பெட்டியில் வைக்கவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு குமரனின் மனைவி சொன்னாள்:
 "அவருடைய பணத்தை எல்லாம் என் வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருக்கிறேன். இப்போது அவர் பெயருக்கு செக் ஒன்றைக் கவரில் வைத்து சவப்பெட்டியில் வைத்திருக்கிறேன். அதை அவர் பேங்கில் போட்டு எடுத்துக் கொள்ளட்டும்''.
 அ.பூங்கோதை, செங்கல்பட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT