முகப்பு
தினமணி கதிர்

மரங்களுக்கு ஆம்புலன்ஸ்!

இந்தியாவிலேயே முதன் முறையாக மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.  இதனை கடந்த வாரம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:03 AM
பகிர்:


இந்தியாவிலேயே முதன் முறையாக மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.  இதனை கடந்த வாரம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். 

இந்த சேவையின் மூலம் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் சாலைகளில் முறிந்து விழும் மரங்களை அப்புறப்படுத்துதல், புதிய மரங்களை நடுதல், விதைப் பந்துகள் விநியோகித்தல், மரங்களைப் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை SASA குழுமம்  என்ற அமைப்பு வழங்க இருக்கிறது. பசுமை மனிதர் டாக்டர் அப்துல் கனி வழிகாட்டுதலில் இந்த மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை வழங்க உள்ளனர்.

இது குறித்து SASA குழும நிறுவனர் சுரேஷ் கிருஷ்ணா ஜாதவ்  கூறியதாவது:

""மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை மூலம் புதிய மரக்கன்றுகள் நடுதல், விதை வங்கி, மரக்கன்றுகள் இலவசமாக வழங்குதல், மரம் நடுவதற்கான உதவிகள் புரிதல், மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் பதியமிடுதல், மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல் என்று எண்ணற்ற பசுமைப் பணிகளை மரங்களுக்கான  இந்த ஆம்புலன்ஸ் சேவை  செய்ய  உள்ளது.

மரங்களை நடுவதில் பயிற்சி பெற்றவர்கள், மரம் நடும் உதவியாளர்கள் ஆகியோர் மரங்களை நடுவதற்கான, பராமரிப்பதற்கான உபகரணங்களுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பயணம் செய்வார்கள். 

இந்த திட்டத்தின் மூலம் அழியும் நிலையில் உள்ள மரங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். 

நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு, காற்று மாசுபடுவது அதிகரித்து வருகிறது. பசுமையைப் பாதுகாப்பதன் மூலமாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காற்று மாசு படுவதைத் தடுக்கவும் முடியும்.  

அதுபோன்று ஓர் இடத்தில்  இருக்கும் மரத்தை அப்புறப்படுத்த  வேண்டும் என்று நினைப்பவர் எங்களுக்குத் தகவல் கொடுத்தால்  அந்த மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடுவதற்கான நவீன உத்திகளைக் கொண்டு  வர இருக்கிறோம். இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்துவதும், தன்னார்வலர் குழுக்களை ஏற்படுத்தி பசுமைப் போர்வைக்கு வித்திடுவதும் தான் எங்கள்   நஅநஅ குழுமத்தின் நோக்கம்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.