தினமணி கதிர்

பள்ளி வளாகத்தில் ரயில்!

மதுரை  பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில்   தெற்கு ரயில்வே காலனியில்  மதுரை (கல்லூரி) மேல்நிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது.

பனுஜா

மதுரை  பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில்   தெற்கு ரயில்வே காலனியில்  மதுரை (கல்லூரி) மேல்நிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. பழமையான  இந்தப் பள்ளியில் புதுமை ஒன்று  சமீபத்தில் அரங்கேறியுள்ளது. அந்தப் புதுமை  மழலையர்களுக்கு  குதூகலம்,  உற்சாகம்  தரும் வகையில்  அமைந்துள்ளது. 

ஆம்... மழலையர் வகுப்பு அறைகள்  ரயில் பெட்டி போன்று  வடிவமைக்கப்பட்டுள்ளன. 

பள்ளியின் அருகில்  உண்மையான ரயில் பாதையும் உள்ளது. அதில் ரயில் வண்டி "கூ.. கூ' என்று ஒலியெழுப்பிக் கொண்டு போகும்... வரும்.  
ரயில்  சத்தம் குழந்தைகளின் காதில் விழுந்ததும் ஆர்வத்தில் சிலர் ரயில் போவதைப் பார்க்க எட்டிப் பார்ப்பார்கள்.

அவர்களின் ஏமாற்றத்தைத் தவிர்க்க  வகுப்பறைகளை ரயில் பெட்டி போல் வடிவமைத்திருக்கிறார்கள். 

ஜன்னல், வாசல் அனைத்தும் ரயில் பெட்டியில் எப்படி இருக்குமோ அப்படியே அமைத்திருக்கிறார்கள்.

ரயில் இன்ஜினையும் வரைந்து வைத்திருக்கிறார்கள்.  ரயில் பெட்டியின் நிறத்தையும்  நீலம், வெளிர் நீலத்தில்  பூசியிருக்கிறார்கள். சட்டென்று பார்த்தால் பள்ளி வளாகத்தில்  ரயில் வண்டி நிற்பது போலத் தோன்றும். 

மழலை வகுப்பில் படிக்கும் குழந்தைகள்  வகுப்பு நேரத்தில்  வெளியே  யாராவது அந்தப் பக்கம் சென்றால், கை அசைத்து "டா டா'  காண்பிக்கிறார்கள்.  இந்த "ரயில் வகுப்பு'  குழந்தைகளுக்குப்   மிகவும் பிடித்திருப்பதால் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்ப   யாரும் முரண்டு பிடிப்பதில்லையாம்! 

அதனால் இந்த  "ரயில்' வகுப்பு   மழலைகளின் பெற்றோருக்கும் பிடித்துப் போய்விட்டது. இந்தப் பள்ளியில் இதர  வகுப்புகளில்  சுமார் மூவாயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT