தினமணி கதிர்

மருந்து தட்டுப்பாடு!

DIN


பிரிட்டனில்  அத்தியாவசியமான  மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம்.  இரத்த அழுத்த நோய்க்கான மருந்துகள்,  மன அழுத்தத்துக்குரிய மருந்துகள்,  சர்க்கரை வியாதிக்கான மாத்திரைகள்  உட்பட 36 வகையான மருந்து, மாத்திரைகளுக்குப் பெருமளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம்.  இதனால் பிரிட்டனைச் சேர்ந்த மக்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து மருந்து மாத்திரைகளை வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.  பிரிட்டனைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மருந்து விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்துக்கு  இதுகுறித்து  எச்சரிக்கை விடுத்தும்  எந்தப் பயனும் இல்லை.  ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பிற நாடுகளுடன் ஏதாவது ஒப்பந்தத்தைப் பிரிட்டன் செய்து கொண்டு இந்த தட்டுப்பாட்டை நீக்க முயற்சிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாகும். மருந்து மாத்திரைகள் இல்லாததால், நோயாளி
களின் கோபத்தை எப்படிச் சமாளிப்பது?   என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியிருக்கிறார்கள்.

ஆதவன், சென்னை-19

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT