தினமணி கதிர்

மைக்ரோ கதை

DIN

அது ஒரு கோயில். செருப்புகளை ஒரே இடத்தில் கழற்றி வைக்காமல் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக கழற்றி வைத்தால் திருடு போகாது என்று சுந்தரம் சொன்னான். அதைக் கேட்ட குமார் கோயில் முன்புறம் இருந்த கடையருகே ஒரு செருப்பை ஓர் இடத்திலும் இன்னோர் செருப்பை வேறோர் இடத்திலும் கழற்றி வைத்துவிட்டு கோயிலுக்குள் சென்றான்.
 சாமி கும்பிட்டுத் திரும்பி வந்து பார்த்தபோது, ஒரு செருப்பு மட்டும்தான் இருந்தது. அங்கே இங்கே என்று குமார் தேடுவதைப் பார்த்த கடைக்காரர் கேட்டார்:
 "என்ன சார் தேடுறீங்க?''
 "ஒரு செருப்பு இருக்கு. இன்னொரு செருப்பைக் காணலை''
 கடைக்காரர் சொன்னார்:
 "அடடா... ஒத்த செருப்பாக் கிடந்தது. வேஸ்ட்ன்னு நினைச்சு இப்பதான் குப்பை லாரியிலே போட்டேன்'' .
 சாய் ஜயந்த், பூந்தமல்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT