திரைக் கதிர்
சமீபத்தில் சமந்தாவின் ரசிகர்களுக்கும் பூஜா ஹெக்டேவின் ரசிகர்களுக்கும் சமூக வலைதளத்தில் மோதல் ஏற்பட்டது.
சமீபத்தில் சமந்தாவின் ரசிகர்களுக்கும் பூஜா ஹெக்டேவின் ரசிகர்களுக்கும் சமூக வலைதளத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சமந்தாவை 10.8 மில்லியன் பேரும், பூஜா ஹக்டேவை 11 மில்லியன் பேரும் பின்தொடர்கிறார்கள்.
"கோலமாவு கோகிலா' பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் "டாக்டர்'. இதில் "செல்லம்மா' எனும் பாடலை சிவகாத்திகேயன் எழுதியுள்ளார். அதில் "இனி டிக் டாக் எல்லாம் இங்க பேண்ட்டு மா.. நேரா டூயட் பாட வாயேம்மா' எனும் வரிகள் இடம் பெற்றுள்ளன.
ஆசியாவிலேயே, இந்த ஆண்டுக்கான செல்வாக்கு உள்ள நபர்கள் பட்டியலில், 100 பேரில் ஒருவராக, நடிகை ஸ்ருதி ஹாசன் தேர்வாகியுள்ளார். நியூயார்க் ஏஜன்சி ஒன்று நடத்திய தேர்வுப் பட்டியலில், இவர் இடம் பிடித்துள்ளார்.
Advertisement
நடிகை பிரியா ஆனந்திற்கு "எல்.கே.ஜி' படம் நன்றாகப் போனாலும், தொடர்ந்து பெரிய படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பொது முடக்கத்துக்கு முன் "மிர்ச்சி' சிவாவுடன் அவர் நடித்த "சுமோ' படமும், வெளிவராமல் உள்ளது. அந்த படம் வெளி வந்து மீண்டும் அதிக வாய்ப்புகள் தன்னைத் தேடி வரும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
"மெட்ராஸ்', "கபாலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரித்விகா. சமீபகாலமாக, தெருநாய்களுக்கு உணவு அளிப்பதை, தன் வேலைகளில் ஒன்றாக வைத்துள்ளார். குறிப்பிட்ட தெருக்களுக்கு இவர் சென்றால், நாய்களின் அன்புத் தொல்லையில் இருந்து இவர் தப்பவே முடிவதில்லை.
அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்த படம் "ஓ மை கடவுளே'. இப்படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில், "ஓ மை கடவுளே' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் விஜய் சேதுபதி கடவுளாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரகுல் பிரீத்தி சிங், தற்போது "இந்தியன் 2', "அயலான்' படங்களில் நடிக்கிறார். ஐதராபாத்தில் வசித்து வரும் அவர், தெலங்கானா போலீசை பாராட்டி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.