முகப்பு
தினமணி கதிர்

பேல்பூரி

""ரிசல்ட் என்னாச்சு?''"" நெகட்டிவ்தான்''( சிரிக்கிறார்)""வாழ்க்கையிலேயே, டெஸ்ட்டுக்கு பெயில் ஆகி சிரிப்பது இதுக்குத்தான்னுநினைக்கிறேன்''

தினமணி கதிர்

பேல்பூரி

""ரிசல்ட் என்னாச்சு?''"" நெகட்டிவ்தான்''( சிரிக்கிறார்)""வாழ்க்கையிலேயே, டெஸ்ட்டுக்கு பெயில் ஆகி சிரிப்பது இதுக்குத்தான்னுநினைக்கிறேன்''

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:


கண்டது

(கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டின் பெயர்)

முளகா தண்ணி

பிரபு, பொள்ளாச்சி.

(பெருந்துறையில் உள்ள பேக், செருப்பு விற்கும் கடை வாசலில் உள்ள கரும்பலகையில் ஒட்டப்பட்டிருந்த பிரிண்ட் அவுட்டில்)

வாழ்க்கை Online
அன்பு Offline
மனது என்றுமே Pending
கவலை நாளுக்கு நாள் Updating
பிரச்னை எப்படியும் Incoming
பணம் என்றுமே Outgoing
ஆனாலும் நான் Working
சந்தோஷம் மெதுவா Downloading

கி.சரஸ்வதி, ஈரோடு.

(மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோயில் உட்பிரகார சுவரில் எழுதப்பட்டுள்ள வாசகம்)

முடிந்த வழிகளில் எல்லாம்
நன்மை செய்யுங்கள்!
முடிந்த வகைகளில் எல்லாம் நன்மை செய்யுங்கள்!
முடிந்த இடங்களில் எல்லாம்
நன்மை செய்யுங்கள்!
முடிந்த நேரங்களில் எல்லாம்
நன்மை செய்யுங்கள்!
முடிந்த மனிதருக்கு எல்லாம்
நன்மை செய்யுங்கள்!

க.இளங்கோவன், நன்னிலம்.

கேட்டது

(சென்னை ராயப்பேட்டை - ஜானிஜான் கான் ரோட்டில் இரு நண்பர்கள்)

""செல்போன்ல வர்ற விளம்பரத்துக்கு ஒரு அளவே இல்லாமப் போச்சுன்னு அலுத்துக்குறியே... ஏன்... என்னாச்சு ?''
""ரம்மி விளையாடுங்க! பணம் வெல்லுங்க! ன்னு ஏதோ அறிவுரை சொல்ற மாதிரி வந்துக்கிட்டே இருக்கே அதைச் சொன்னேன்''
""ஆமாமா... அதை மட்டும் ஒலிம்பிக்ல சேர்த்தா தங்கம், வெள்ளி, வெண்கலம்ன்னு எல்லாப் பதக்கமும் நாம்தான் வாங்குவோம்''

எ.எம்.எம்.ரிஸ்வான்,
சென்னை- 14


(நெய்வேலி கடைத் தெருவில் இரு நண்பர்கள்)

""ரிசல்ட் என்னாச்சு?''
"" நெகட்டிவ்தான்''( சிரிக்கிறார்)
""வாழ்க்கையிலேயே, டெஸ்ட்டுக்கு பெயில் ஆகி சிரிப்பது இதுக்குத்தான்னு
நினைக்கிறேன்''

ஆர்.கிருத்திக்குமார்,
நெய்வேலி-3.


யோசிக்கிறாங்கப்பா!

நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்தாலும்,
யாருக்கும் தொந்தரவாக இல்லாமல்
சற்று ஒதுங்கி ஓரமாக நில்லுங்கள்!

ப. பச்சமுத்து, கிருஷ்ணகிரி- 1


மைக்ரோ கதை

ஒரு விஞ்ஞானி ஒரு தவளையை வைத்து ஆராய்ச்சி பண்ணினார். அதனிடம் "ஜம்ப்' என்று சொன்னால் குதித்து தாவுவதற்குப் பழக்கி இருந்தார்.
ஒருநாள்... அவர் ஜம்ப் என்று கத்தினார். அது குதித்துத் தாவியது.
பின்பு அதன் ஒரு காலை வெட்டி எடுத்து விட்டு, ஜம்ப் என்று கத்தினார்.
அது கொஞ்சம் கஷ்டப்பட்டு குதித்துத் தாவியது.
பின்பு அதன் இன்னொரு காலை வெட்டி எடுத்து விட்டு, ஜம்ப் என்று கத்தினார்.
அது ரொம்ப கஷ்டப்பட்டு குதித்துத் தாவியது.
பின்பு அதன் 3வது காலையும் வெட்டி எடுத்து விட்டு, ஜம்ப் என்று கத்தினார்.
அது ரொம்ப,ரொம்ப கஷ்டப்பட்டு ஏதோ குதித்துத் தாவியது.
பின்பு அதன் 4வது காலையும் வெட்டி எடுத்து விட்டு, ஜம்ப் என்று கத்தினார்.
அது குதித்துத் தாவவே இல்லை.
அவர் தனது ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினார்.
" தவளைக்கு 4 கால்களையும் வெட்டி விட்டால் அதற்கு காது கேக்காது'.

ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்- 1.


எஸ்.எம்.எஸ்.

முள்ளின் திறமையைப் பாருங்கள்...
காலால் மிதித்தவனைக்
கையால் எடுக்க வைக்கிறது.

-ஏ.எம்.ஷெரீப். புதுக்கோட்டை.


அப்படீங்களா!


மொபைல் போனை சார்ஜ் செய்ய பல புதிய முறைகள் வந்துவிட்டன. அவற்றில் ஒன்று நேரடியாக வயர் மூலமான மின் இணைப்பு எதுவும் இல்லாமல் சார்ஜ் செய்வது. பஹல்சஇட்ஹழ்ஞ்ங் என்ற கருவியின் மூலம் வயர் மூலமான எந்த இணைப்பும் இல்லாமல் உங்கள் மொபைல் போனை சார்ஜ் செய்யலாம்.

உங்களுடைய மொபைல் போனின் பின்புறம் மிகவும் மெல்லியதான ணண் அடாப்டரை ஒட்ட வேண்டும். அடாப்டர் ஒட்டிய பகுதியை இந்தக் கருவியில் உள்ள ஒரு சிறு டஹக்- இன் மேல் வைத்தால் போதும். மொபைல் போன் சார்ஜ் ஆகிவிடும்.

இந்தக் கருவிக்கு நேரடியான மின் இணைப்புத் தர வேண்டும். அப்போது கருவியில் உள்ள பேடில் இருந்து மின்காந்த அலைகள் உருவாகும். இந்த மின்காந்த அலைகள் ணண் அடாப்டரின் மூலமாக மொபைல் போனை சார்ஜ் செய்ய வைக்கிறது. வழக்கமானமுறையில் மொபைல் போனை சார்ஜ் செய்தால் சார்ஜ் ஆக நீண்ட நேரம் ஆகும். இந்தக் கருவியின் மூலம் மிக விரைவில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

என்.ஜே., சென்னை-58.

முழு கட்டுரையைப் படிக்க →