10 நாளில் கட்டப்பட்ட மருத்துவமனை!
சீனாவில் கரோனா வைரஸ் அதிகம் தாக்கிய வூஹான் நகரில் 10 நாள்களில் ஒரு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் 1 கோடியே 10 லட்சம் பேர் வாழ்கின்றனர்.
சீனாவில் கரோனா வைரஸ் அதிகம் தாக்கிய வூஹான் நகரில் 10 நாள்களில் ஒரு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் 1 கோடியே 10 லட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் நகரை விட்டு வெளியேறாதவண்ணம் தடுக்கப்பட்டுள்ளனர்.
சீனா முழுவதும் 17 ஆயிரம் பேருக்கும் மேல் கரோனா வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 23 - ஆம் தேதி தொடங்கப்பட்ட மருத்துவமனை கட்டுமானப் பணி பிப்ரவரி 3 -ஆம் தேதி முடிவடைந்துள்ளது. 1000 படுக்கை வசதிகள் உள்ள இந்த மருத்துவமனை 419 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 30 அவசரச் சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன.
60 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது.
7 ஆயிரம் கார்பென்டர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீசியன்கள் இந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர். 1400 ராணுவ மருத்துவர்கள் வூஹானுக்கு வந்துள்ளனர்.
மருத்துவமனைக்குத் தேவையான மருந்துகளை சப்ளை செய்வதற்கும், நோயாளிகளின் உடம்பில் சோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் மருத்துவ ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஏற்கெனவே 2003 ஆம் -ஆண்டுநஅதந வைரஸ் தாக்குதலின்போது பெய்ஜிங் நகரில் இதுபோன்று ஒரு மருத்துவமனையைக் கட்டி முடித்த அனுபவம் சீனாவுக்கு இருக்கிறது.