தினமணி கதிர்

மறுமணம் செய்து கொண்ட அமலாபால்!

அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்து மணந்தார். 2 வருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார் அமலாபால்.

ஜி. அசோக்

அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்து மணந்தார். 2 வருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார் அமலாபால். இந்த நிலையில் அமலாபாலுக்கும் பாலிவுட் பாடகர் பவிந்தர் சிங்கிற்கும் காதல் மலர்ந்தது. 

சமீபத்தில் இவர்களின் காதல் வெளிவுலகத்துக்குத் தெரிய வந்தது. சில தினங்களுக்கு முன் அமலாபாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைப் பவிந்தர் சிங் வெளியிட்டார். 

இந்த நிலையில் இருவரும் பாரம்பரிய முறைப்படி ரகசியத் திருமணம் செய்து கொண்டனர். இந்த விழாவில் நெருக்கமான உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். 

திருமண படத்தை பவிந்தர் சிங் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டார். சிறிது நேரத்திலேயே அவற்றை நீக்கிவிட்டார்.  வழக்கமாக இன்ஸ்டாகிராமில் தீவிரமாக புகைப்படங்களை வெளியிடும் அமலாபால் மறுமண புகைப்படங்களை வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT